ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் சீசன் 6 : முதலில் வெளியேறும் போட்டியாளர் இவர்தானா?

பிக்பாஸ் சீசன் 6 : முதலில் வெளியேறும் போட்டியாளர் இவர்தானா?

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6

இந்த சீசன் போட்டியாளர்கள் அட்வான்ஸாக சென்று முதல் வாரமே சண்டை, அழுகை என டி.ஆர்பி ரேசில் இணைந்து விட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலில் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

  பிக் பாஸ் சீசன் 6 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. போன வார எபிசோடில் கமல்ஹாசன் குறிப்பிட்ட மாதிரியே முதல் வாரத்திலே இந்த சீசன் போட்டியாளர்கள் கன்டெண்ட் கொடுக்க தயாராகி விட்டனர்.

  மற்ற சீசன்களில் 50 நாட்களுக்கு மேல் தான் போட்டியாளர்கள் வாய்கால் தகராறை தொடங்குவார்கள். ஆனால் இந்த சீசன் போட்டியாளர்கள் அட்வான்ஸாக சென்று முதல் வாரமே சண்டை, அழுகை என டி.ஆர்பி ரேசில் இணைந்து விட்டனர். குறிப்பாக தனலட்சுமி, அசல், அசீம் ஆகியோர் தினமும் ஒருவருடன் முட்டிக் கொள்கிறார்கள்.

  நேற்றைய எபிசோடில் அசீம் வாடி போடி என பேச, ஆயிஷா செருப்பை கழட்ட பிரச்சனை  பூதாகரமானது. கடைசியில் இருவரும் ஒருவரையொருவர் மன்னிப்பு கேட்டு தங்களுக்குள்ளே முடித்துக்கொண்டனர்.

  அம்மாடி உன் அழகு செம்ம தூளு! புடவையில் ரசிக்க வைக்கும் மாளவிகா மோகனன்..

  ஆனால் கமல் இதை சாதாரணமாக விடமாட்டார் என்பது நன்கு அறிந்ததே. அதிலும் அசீமின் பேச்சு, உடல்மொழி, பாவனை ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இதனால் இந்த முறை கமல்ஹாசன் அறிவுரை அதிகம் அசீம்மை நோக்கி தான் இருக்கும் என தெரிகிறது.

  பிக்பாஸ் தொடங்கி 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ரசிகர்களின் கவனம் எந்த போட்டியாளர் முதலில் வெளியேறுவார் என்றுதான் உள்ளது.

  தங்கம் போல் ஜொலிக்கும் பூஜா ஹெக்டேவின் படத்தை பாத்தீங்களா?

  கடந்த சீசன்களில் முதலில் அனுயா, மமதி சாரி , பாத்திமா பாபு, ரேகா, நதியா ஆகியோர் வெளியேறினர். இந்த சீசனை பொருத்தவரையில் நடன இயக்குனர் சாந்தி முதலில் வெளியேறுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

  சாந்தி மாஸ்டர்

  சாந்தி வெளியேறுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியான நிலையில், அவர் நல்ல போட்டியாளர் என்ற ரீதியில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg Boss Tamil 6