ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் தான் முக்கியம்.. பிரபல சீரியலை ஏறக்கட்டும் விஜய் டிவி!

பிக் பாஸ் தான் முக்கியம்.. பிரபல சீரியலை ஏறக்கட்டும் விஜய் டிவி!

விஜய் டிவி

விஜய் டிவி

பிக் பாஸ் அடுத்த வாரம் முதல் டெலிகாஸ்ட் ஆகவுள்ளதால் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9 முதல் ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில் பிரபல சீரியலுக்கு என்டு கார்டு போட  விஜய் டிவி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9 முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல் சின்னத்திரையில் களம் இறங்குகிறார். வழக்கம் போல் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் தினமும் வெளி வந்துக் கொண்டிருக்கிறது. அந்த லிஸ்டில் தயாரிப்பாளர் ரவீந்தர், ஆயிஷா, மதுரை முத்து, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, மகாலட்சுமி பெயர்கள் தொடர்ந்து அடிப்பட்டு வருகின்றன.

  சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. தாமரை செல்விக்கு அடித்தது யோகம்!

  இந்நிலையில் பிக் பாஸ் அடுத்த வாரம் முதல் டெலிகாஸ்ட் ஆகவுள்ளதால் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மாலை தொடங்கி இரவு வரை ஒளிப்பரப்பாகும் சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றியுள்ளது. இதுமட்டுமில்லை மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பாரதிதாசன் காலணி சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடர் முடிக்கப்பட்ட பின்பு பாரதிதாசன் காலணி என்ற புத்தம் புதிய சீரியலை விஜய் டிவி களம் இறக்கியது. டெலிகாஸ்ட் ஆன கொஞ்ச நாளிலே  இந்த சீரியலுக்கு என்டு கார்டு போட விஜய் டிவு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  அதே போல் வரும் வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி சீரியல் மகா சங்கமம் எபிசோடுகளும் ஒளிப்பரப்பாகவுள்ளன. இந்த வாரம் பாரதிதாசன் காலணி சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, TV Serial, Vijay tv