ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸில் இந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க்.. முதல் கேமிலே கடுப்பான மணிகண்டன் - வெளியானது வீடியோ!

பிக்பாஸில் இந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க்.. முதல் கேமிலே கடுப்பான மணிகண்டன் - வெளியானது வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷனில் அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி மற்றும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 16-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. கடந்த வாரத்தில் அது வெடித்து சிதறியது.

கடந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து தனது குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சனிகிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் சனிகிழமை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மீதம் உள்ள 19 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. நேற்றைய எபிசோடில் இந்த வாரத்திற்கான தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் மகேஸ்வரி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் மற்றும் குயின்சி ஆகிய மூன்று பேரும் கலந்துகொண்டனர். அந்த போட்டியில் குயின்சி வெற்றிப் பெற்று இந்த வார தலைவர்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற எவிக்‌ஷன் நாமினேஷனில் அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி மற்றும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று 16-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வார டாஸ்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற கேம் வழங்கப்படுகிறது.

Also read... பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கிய ஆயிஷா - போட்டியாளர்கள் அதிர்ச்சி

அந்த டாஸ்கில் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களின் பெயர்களும் ஒட்டப்பட்ட பொம்மைகள் கார்டர் ஏரியாவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தன்னுடைய பெயர் இல்லாமல் மற்றவரின் பெயர் உள்ள பொம்மைய எடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த இடத்தில் 18 பொம்மைகள் மட்டுமே வைக்கும் அளவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மீதம் உள்ள 1 பொம்மையில் யார் பெயர் உள்ளதோ அவர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் முன்னதாக அறிவித்தனர்.

இந்நிலையில், இந்த டாஸ்கின் போது மணிகண்டன் பெயர் உள்ள பொம்மையை யாரும் எடுக்காத காரணத்தால் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது போலவும் அந்த ப்ரோமோ வீடியோவில் உள்ளது. இதனால் கடுப்பான மணிகண்டன் நான் யாருன்னு இனி காட்றேன் என்று பேசுவதும் அந்த வீடியோவில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6