ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எல்லை மீறுகிறாரா ராபர்ட் மாஸ்டர்! ஜிபி முத்துவுக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்!

எல்லை மீறுகிறாரா ராபர்ட் மாஸ்டர்! ஜிபி முத்துவுக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்!

பிக் பாஸ் புரொமோவில் ஜி.பி. முத்து - ராபர்ட் மாஸ்டர்

பிக் பாஸ் புரொமோவில் ஜி.பி. முத்து - ராபர்ட் மாஸ்டர்

தொடர்ந்து ஸ்விம்மிங் பூல் அருகேயுள்ள பெட்டில் முத்து படுத்துக்கொள்கிறார். பின்னர் கொட்டும் சாரலில் ஆட்டம் போட ப்ரொமோ முடிகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக்பாஸ் வீட்டிற்குள் ஜி.பி.முத்துவை டார்ச்சர் செய்த ராபர்ட் மாஸ்டருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

  சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

  இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

  ஆசியாவின் சிறந்த நடிகர்! 'மின்னல் முரளி'யில் கலக்கிய குருசோமசுந்தரத்துக்கு கிடைத்த கெளரவம்!

  இந்நிலையில் இன்றைய நாளிற்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜி.பி.முத்து கேமெரா முன் நின்று நான் சந்தோஷமா இருக்கேன் நீங்க எல்லாம் ஜாலியா இருங்க என்று பறக்கும் முத்தத்தையும் தனது குடும்பத்திற்கு அளித்தார்.

  இதன்பின்னர் தூங்கிக் கொண்டிருந்த ஜி.பி. முத்துவை ராபர்ட் மாஸ்டர் டார்ச்சர் செய்து, அவரை பயம் காட்டி விடுகிறார். இதில் பதறிப் போன முத்துவை சக போட்டியாளர்கள் தேற்றுகின்றனர். தொடர்ந்து ஸ்விம்மிங் பூல் அருகேயுள்ள பெட்டில் முத்து படுத்துக்கொள்கிறார். பின்னர் கொட்டும் சாரலில் ஆட்டம் போட ப்ரொமோ முடிகிறது.

  Arnaav: நா என்ன சேரில பொறந்தவனா? செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

  இந்நிலையில் வெகுளியான ஜிபி முத்துவை ராபர்ட் மாஸ்டர் இப்படி டார்ச்சர் செய்யலாமா என முத்துவின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர். முத்துவுக்கு ஆதரவாக கமென்டுகள் பகிரப்பட்டு வருகிறது.

  தலைவன் டைட்டில் வாங்காமல் விடமாட்டோம், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒரே செலிபிரட்டி அவர்தான், ஜெயிக்கிறீங்களோ இல்லையோ உங்க இயல்பு மாறாம fun பண்ணிட்டு வாங்க தலைவா என்று ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg Boss Tamil 6