ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KGF மாஸ் ஓபனிங்... மனைவியின் ஆசை.. அசத்தல் ப்ரோமோவுடன் களம் இறங்கிய ஜிபி முத்து!

KGF மாஸ் ஓபனிங்... மனைவியின் ஆசை.. அசத்தல் ப்ரோமோவுடன் களம் இறங்கிய ஜிபி முத்து!

ஜி.பி. முத்து

ஜி.பி. முத்து

பிக் பாஸில் பங்கேற்பது குறித்து தனது பிள்ளைகளிடம் ஜி.பி. முத்து கேட்க, அவரது மகன் ‘நீங்கள் எப்போது நிகழ்ச்சிக்கு போவீர்கள் என்று காத்துக்கிட்டு இருந்தேன்’ என்று கூறுகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக்பாஸ் சீசன் 6 போட்டியில் ஜி.பி. முத்து பங்கேற்று இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியான அவரது அறிமுக வீடியோ வைரலாகி வருகிறது.

  டிக் டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வீடியோ தளங்களில் நன்கு அறிமுகமானவர் ஜி.பி.முத்து. மிகப்பெரிய நட்சத்திரத்திற்கு இணையாக இவர் தமிழ்நாட்டில் மற்றும் தமிழர் உள்ள பகுதிகளில் பேமஸ் ஆகியுள்ளார்.

  ஜி.பி.முத்து பிக் பாஸ் சீசன் 6 -இல் பங்கேற்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இன்று தொடங்கிய பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து பங்கேற்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக வீடியோ ஒன்றை விஜய் டிவி பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் கே.ஜி.எஃப். படத்தின் பின்னணி இசையுடன், ஜி.பி. முத்து ரெடியாகும் காட்சிகள் அதிர வைக்கின்றன.

  வேற லெவல் ரிவியூ! கன்னட சினிமாவில் சக்கைப்போடு! தமிழுக்கும் வருகிறது காந்தாரா!

  ‘போஸ்டல் வருவது லெட்டர்ல இருக்கிற அட்ரஸ பார்த்து இல்ல. அட்ரஸ்ல இருக்கிற பின்கோட பார்த்து. இந்த லேண்ட்மார்க்குக்கு பின்கோடு இல்ல. ஸ்டாம்ப் கூட தேவையில்லை’ என்னும் கேஜிஎப் டயலாக் பின்னணியில் ஒலிக்க, ஜி.பி. முத்துவின் சொந்த ஊரான உடன்குடி மற்றும் உடன்குடி தபால் நிலைய காட்சிகள் காட்டப்படுகின்றன.

  வீட்டின் முன்பாக ஜி.பி. முத்துவின் ரசிகர்கள் கூடி தலைவரே தலைவரே என்று அழைக்கும் காட்சிகள், பின்னர் ஜி.பி. முத்து தன்னை அறிமுகப்படுத்தும் காட்சி, மனைவியுடன் வீதிகளில் வலம் வருவது, பிள்ளைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பணம் கொடுக்காமல் செல்வது, டிக் டாக்கில் நுழைந்தது, கொரோனாவில் ஏற்பட்ட கஷ்டம், உடன்குடி போஸ்ட் ஆபிஸில் நூற்றுக்கணக்கில் குவிந்த தபால்கள் உள்ளிட்ட காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

  சின்னத்திரையில் மீண்டும் ஜொலிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜே மகேஸ்வரி..

  பிக் பாஸில் பங்கேற்பது குறித்து தனது பிள்ளைகளிடம் ஜி.பி. முத்து கேட்க, அவரது மகன் ‘நீங்கள் எப்போது நிகழ்ச்சிக்கு போவீர்கள் என்று காத்துக்கிட்டு இருந்தேன்’ என்று கூறுகிறார்.

  எத்தனை நாட்கள் அங்கே இருப்பேன் என்று கேட்க, இன்னொரு மகள் ‘அங்கு 10 நாட்கள் கூட இருக்க மாட்டீர்கள்’ என்று ஜி.பி.முத்துவை கிண்டல் செய்கிறார். கடைசியாக ‘’எப்போது போவீர்கள் தலைவரே என்று என்னை தொடர்ந்து ரசிகர்கள் தொந்தரவு செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் இந்த பிக்பாஸில் பங்கேற்கிறேன். ஒரு குளுகுளுப்பாக இருக்க போகிறேன் பார்’ என்று சொல்வதுடன் வீடியோ முடிகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg Boss Tamil 6