• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்..

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்..

பிக்பாஸ் சீசன் 5

பிக்பாஸ் சீசன் 5

பாவனி மற்றும் வீட்டின் தலைவரான தாமரைச்செல்வியை தவிற அனைவருமே நாமினேட் ஆகியுள்ளார்கள்.

  • Share this:
    பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் விஜய் டிவி போட்டியாளர்கள் அதிகம் பங்குப்பெற்றதாக கூறப்பட்டதோடு, அந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தெரியாத முகங்களே அதிகமாக உள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 12 நாட்கள் ஆகியும் இன்னும் ஒருவரை ஒருவர் தெரிந்துக்கொள்ளும் முயற்சியில் தான் உள்ளனர்.ஏற்கனவே வீட்டில் உள்ள பலரும் தாங்கள் கடந்து வந்த பாதையை போட்டியாளர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர். அந்த வகையில் நேற்று கதை சொல்லும் டாஸ்க்கில் நிரூப் தனது கதையை கூறினார். ‘ ஒரு பையனால்ல ஒரு பொண்ணு முன்னேறப்ப, ஒரு பொண்ணால்ல பையன் வளரக் கூடாதா’ என்று  நிரூப் கூற ப்ரியங்கா ஒரு பக்கம் சந்தோஷத்தில் ஐ லவ் யூ என்று கத்தினார்.நிரூப்பின் கதைக்கு லைக் மற்றும் ஹார்ட் சிம்பிள் பற்றாக்குறையால் அனைவருமே டிஸ் லைக் சிம்பிள் தான் கொடுத்தனர். ஆனால் அனைவரின் மனதையும் நிரூப் வென்று விட்டார் என்பது தான் உண்மை.



    அதையடுத்து அபிநய்  நான் ஜெமினி- சாவித்திரியின் பேரன் என்று கதையை தொடங்கி வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள், ‘தனது மனைவி தான் என்னை பார்த்துக்கொள்கிறார். நான் ஒரு நல்ல கணவனா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நல்ல அப்பா’ என்று சொல்லி வீட்டில் இருக்கும் அனைவரின் கைத்தட்டையும் பெற்றார்.அபிநயை தொடர்ந்து நாடியா சாங் சிறுவயதிலிருந்து வேலைக்கு சென்றதாகவும் அவரின் அம்மாவின் அடி உதை பற்றி பேசினார்.பின்பு அவர் சிங்கப்பூரை சேர்ந்த சாங் என்பவரை திருமணம் செய்ததால் தான் இன்று பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக தனது கணவரை பற்றி பெருமையாக கூறினார்.நேற்றைய நாள் இப்படியே முடிந்தது.

    also read : பிக் பாஸ் ராஜூ மீது பாவனியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. விசாரணை கமிஷன் எப்ப பாஸூ?



    தற்போது விஜயதசமியை முன்னிட்டு நாடக டாஸ்க் ஒன்று வீட்டில் நடைப்பெற உள்ளது.ஆனால் வாரக்கடைசி வந்துவிட்டதால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் உள்ளது.



    பாவனி மற்றும் வீட்டின் தலைவரான தாமரைச்செல்வியை தவிற அனைவருமே  எலிமினேஷன் ப்ராஸஸிற்கு நாமினேட் ஆகியுள்ளார்கள். அந்த வகையில் பிக்பாஸ் வோட்டிங் லிஸ்டில் நாடியா சாங், அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் மிக குறைந்த வாக்குகளை பெற்றிருப்பதால்,இந்த மூவரில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய  பேசிய பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி நெகடிவ் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: