• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் 5 ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்... மீண்டும் வருகிறாரா நமீதா மாரிமுத்து?

பிக் பாஸ் 5 ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்... மீண்டும் வருகிறாரா நமீதா மாரிமுத்து?

பிக் பாஸ் நமீதா மாரிமுத்து

பிக் பாஸ் நமீதா மாரிமுத்து

நமீதாவின் வெளியேற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், நமீதாவின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி

  • Share this:
    நமீதா மாரிமுத்து முழுவதுமாக வெளியேறவில்லை. தற்போது சிகிச்சை எடுத்து வருவதாகவும், விரைவில் நலம் பெற்று போட்டியாளராக பிக் பாஸில் கலந்து கொள்வார் என்றும் செய்தி வெளியானது.

    பிக் பாஸ் தமிழ் சீசன் 5, கடந்த அக்டோபர் 3 அன்று பிரமாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த ஆண்டு அனைவரின் கவனத்தையும் முதல் நாளே ஈர்த்தது. இதற்கான முக்கிய காரணம், தமிழ் தொலைகாட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திருநங்கை போட்டியாளராக பங்கேற்றதே ஆகும். ஒரு திருநங்கையை போட்டியாளராக களம் இறக்கியதற்கு விஜய் தொலைக்காட்சியும் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றது.லட்சக்கணக்கான ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் மாடல் மற்றும் நடிகையான நமீதா மாரிமுத்து. நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் முதல் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் கடந்த வந்த பாதை குறித்து பேச வேண்டும் என கூறப்பட்டது. போட்டியாளர்கள் தங்களைப் பற்றி, வாழ்வில் பட்ட துன்பங்கள், கடந்து வந்த பாதை பற்றி பகிர்ந்து கொண்டனர்.

    அதன்படி வலி நிறைந்த கடந்த காலத்தை நமீதா மாரிமுத்து பகிர்ந்த போது, கண்கள் கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. திருநங்கையாக நமீதா எதிர்கொண்ட சவால்கள் அனைத்தும் நம்முடைய கற்பனைக்குக் கூட அப்பாற்பட்டவை. நமீதாவின் கடந்த கால வாழ்வு அவர் பட்ட துன்பங்களை வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், நம் நாட்டில் திருநங்கைகள் வாழ்க்கை எவ்வாறு போராட்டமாக இருக்கிறது என்பதை உலகுக்கு தெரிவித்தார்.நமீதா போட்டியாளராக அறிமுகமான போது, ரசிகர்கள் கவனத்தை மட்டுமே ஈர்த்தார். ஆனால், நமீதாவின் கடந்த கால போராட்டங்கள் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதைத் தொட்டது. பிக் பாஸ் சீசன் 5ல் நமீதா மிகவும் சவாலான போட்டியாளராக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியானது.

    எதிர்பாராத விதமாக, நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறினார் என்ற செய்தி கடந்த சனிக்கிழமை அன்று வெளியானது. நமீதா வெளியேறியதற்கான என்னவென்று ஆதராப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால், உடல்நலக் கோளாறு காரணமாக வெளியேறினார் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

    அதே லவ்.. இத்தனை வருஷம் ஆகியும் தென்றல் தமிழ் மாறவே இல்லை!

    நமீதாவின் வெளியேற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், நமீதாவின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறினார். நிகழ்ச்சியில் இருந்து முழுவதுமாக வெளியேறவில்லை. தற்போது சிகிச்சை எடுத்து வருவதாகவும், விரைவில் நலம் பெற்று போட்டியாளராக பிக் பாஸில் கலந்து கொள்வார் என்றும் செய்தி வெளியானது.நமீதா மாரிமுத்து, நாடோடிகள் 2 படத்தில் நடிகையாகவும், பாடகியாகவும் அறிமுகமானார். மாடலிங் உலகில் திருநங்கைகள் பிரிவில் பெரிய வெற்றிகளை அடைந்து, தனக்கென்று மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளவர் நமீதா என்பதும் குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: