பிக்பாஸ் சீசன் 4 ... தொகுப்பாளராகும் சூப்பர் ஸ்டார் - முதலாவதாக வந்த அப்டேட்!

பிக்பாஸ் சீசன் 4 ... தொகுப்பாளராகும் சூப்பர் ஸ்டார் - முதலாவதாக வந்த அப்டேட்!
பிக்பாஸ்
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் 4-வது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. அதை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். அதேபோல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்துள்ளன.

தமிழில் 3 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் தெலுங்கில் நாகர்ஜுனா, ஜுனியர் என்டிஆர், நடிகர் நானி ஆகியோர் தொகுத்து வழங்கி இருந்தனர். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் 4 சீசனை தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிகழ்ச்சிக் குழு இன்னும் வெளியிடவில்லை.


தமிழில் பிக்பாஸ் 4 சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணி, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் இம்முறை பிக்பாஸிலிருந்து விலகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகென் ராவ் வெற்றியாளராக தேர்வானதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்னுடைய குடும்பத்தை விட்டு விடுங்கள்... தர்ஷன் - சனம் ஷெட்டி விவகாரத்தில் மவுனம் கலைத்த ஷெரின்!


First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading