Home /News /entertainment /

பிக் பாஸ் வனிதா மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்.. அப்படி என்ன செய்தார்?

பிக் பாஸ் வனிதா மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்.. அப்படி என்ன செய்தார்?

பிக் பாஸ் வனிதா

பிக் பாஸ் வனிதா

தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி இருக்கும் வனிதாவின் இந்த கருத்து ஒரு சில விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை

  பிக் பாஸ் புகழ் வனிதா, அண்மையில் அளித்த பேட்டியும், அதில் அவர் நடிகர் விஜய் பற்றிய பேசிய கருத்துக்கள் தான் நேற்று முதல் சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய விவாதப் பொருளாக சென்று கொண்டிருக்கிறது. அப்படி என்ன சொன்னார் வனிதா? வாங்க பார்க்கலாம்.

  1995 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் வனிதா. இவர் விஜய்குமார் - மஞ்சுளா தம்பதியி மகள் ஆவார். அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்தவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு குட் பை சொன்னார். பின்பு கணவருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து மோதலால் வனிதா விவகாரத்து வாங்கினார். அதன் பின்பு வனிதாவுக்கு அவரின் அப்பா, அம்மா என குடும்ப உறவுகள் உடனும் சண்டை வந்தது. இதனால் அவர்களை விட்டு வனிதா பிரிந்தார். அதன் பின்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த மண வாழ்க்கையும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

  இப்போது வனிதாவுக்கு 3 குழந்தைகள். மூத்த மகன், விஜயகுமார் மற்றும் அவரின் அப்பாவுடன் இருக்கிறார். அவருக்கும் வனிதாவுக்கும் இப்போது டச் இல்லை. மற்ற 2 பெண் குழந்தைகளும் இப்போது வனிதாவுடன் தான் இருக்கின்றனர். இதற்கிடையில் வனிதா டான்ஸ் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்ற வருடம் 3 ஆவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவரையும் ஒரு சில மாதங்களில் பிரிந்து விட்டார். இப்படி வனிதாவின் பர்சனல் வாழ்க்கை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கிறது.

  ஆனால் கெரியரில் வனிதா பல வெற்றி படிகளை தொட்டு விட்டார். சினிமாவில் இருந்து விலகியவர் பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் கிடைத்த நெகடிவ் மற்றும் பாசிடிவ் கமெண்டுகளை தக்க வைத்து கொண்டு, அதே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். இவரின் சமையல் திறமையை கண்டு செஃப் வெங்கடேஷ் பட்டும், செஃப் தாமும் பலமுறை வியந்து பாராட்டியுள்ளனர். அதுமட்டுமில்லை அந்த குக்கிங்கை கலையை தனது ரசிகர்களுக்கு கற்று தர நினைத்தவர் சொந்தமாக யூடியூப் சேனலை தொடங்கினார். அதுவும் சக்சஸ் தான். அதில் சமையல் மட்டுமில்லை பியூட்டி, டிப்ஸ், டிராவல் என பல வீடியோக்களை வனிதா வெளியிட்டு வருகிறார்.

  இதையும் படிங்க.. தாலி சென்டிமென்ட் போதும்.. வெற்றிக்கு தண்டனை வாங்கி தர போகும் அபிநயா!

  மீண்டும் வனிதாவின் பெயர் எல்லா பக்கமும் ஒலிக்க, வெள்ளித்திரை வாய்ப்பும் அவரை தேடி வந்தது. பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். பவர் ஸ்டார் படத்தில் ஹீரோயினும் வனிதா தான். இது மட்டுமில்லை வனிதா சொந்தமாக பொட்டிக் ஒன்றையும் பிரம்மாண்டமாக திறந்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வனிதா விஜயகுமார் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி தந்தார். அந்த பேட்டியில் அவர் கூறிய கருத்துக்கள் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

  இந்த கருத்துக்கு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கோபமான எதிர்மறையான கருத்துக்களை வனிதாவுக்கு எதிராக பதிவு செய்து வருகின்றனர். அந்த பேட்டிக்கு கீழ் வனிதாவுக்கு எதிராக விஜய் ரசிகர்களின் கருத்துக்களை பார்க்க முடிகிறது. அப்படி என்ன பேசினார் வனிதா? இதோ அந்த பேட்டியில் வனிதா பேசியதாக இடம் பெற்று இருக்கும் வரிகள்.

  இதையும் படிங்க.. கலர்ஸ் தமிழில் புத்தம் புது சீரியல்.. சாயா சிங் நடிப்பில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் !

  “ அப்போது நடிகர் விஜய்யை நான் அணுகிய முறைக்கும் இப்போது அவர் இருக்கும் உயரத்தை பார்க்கையில் வியப்பாக இருக்கு.
  அந்த நாட்களில் விஜய்யிடம் நான் எப்படி பேசிப் பழகினேனோ அப்படியே இன்னைக்கும் என்னால பேசமுடியும். திடீர்னு `அவர்', `இவர்'னு மாத்திப் பேச முடியாது. இன்னைக்கு நான் பேசுறதைக் கேட்கிறவங்களுக்கு நான் ஏதோ மரியாதைக்குறைவா பேசுறது போல தெரியும். ஆனா, நான் ஆரம்பத்துல இருந்தே அப்படித்தான் பேசிப் பழகியிருக்கேன்.

  நடிகர் விஜய்யோட ரசிகர்கள் எனக்கும் ரசிகர்கள். ஆரம்பகால `தளபதியின் கதாநாயகி' என்கிற அந்தஸ்து எனக்கு இருக்கு, அவரோட ரசிகர்கள் மத்தியில எனக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தரும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி இருக்கும் வனிதாவின் இந்த கருத்து ஒரு சில விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அதை ஏற்காமல் எதிர்மறையான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vanitha Vijayakumar, Vijay tv

  அடுத்த செய்தி