பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரான சாக்ஷி அகர்வால் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் மாடலிங் துறையை சேர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த முகமாக சாக்ஷி மாறிவிட்டார். இதற்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளை எதிர் கொண்டார். இவருக்கும் கவினுக்குமான காதல் ட்ராக் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் தொடர்ந்து படங்களில், மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க.. எனக்கு அமீரை பிடிக்கும்.. மேடையில் போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னி!
இவரின் நடிப்பில் அடுத்ததாக நான் கடவுள் இல்லை, தி நைட் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சாக்ஷி அகர்வால். சன் டிவி சீரியலில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக வெள்ளித்திரை நடிகர் நடிகைகள் பலரும் சீரியல்களில் கெஸ்ட் ரோல் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியலில் இதை அதிகம் பார்க்க முடிகிறது. அபியும் நானும் சீரியலில் நடிகை நந்திதா கெஸ்ட் ரோல் செய்து இருந்தார். தேவயானி நடிக்கும் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் சீரியலில் சமீபத்தில் வனிதா விஜயகுமார் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.
இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?
இப்படி பிரபலங்கள் 2 நாட்களுக்கு அந்த சீரியலில் தோன்றும் போது அந்த வாரத்தில் சீரியலின் டி.ஆர்.பியும் எகிறுகிறது. அந்த வகையில் தான் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் சாக்ஷி அகர்வால் கெஸ்ட் ரோலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீரியல் அப்பா- மகள் பாச உறவை சொல்லும் கதையாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் விரைவில் வரவுள்ள துணிந்து நில் எபிசோடு பகுதியில் தான் சாக்ஷி அகர்வால் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இதுக்குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும், புரமோவும் வெளியாகவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். ஒருவேளை சாக்ஷி அகர்வால் தோன்றினால் கண்டிப்பாக அந்த வாரம் சீரியல் எபிசோடு டி.ஆர்.பியில் எகிறும் என்பதில் சதேகம் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.