தனது குழந்தையை உருவகேலி செய்தவர்களை இன்ஸ்டாகிராமில் வெளுத்து வாங்கியிருக்கிறார் சாண்டி மாஸ்டரின் மனைவி சில்வியா.
சின்னத்திரையில் தனது நடனத்தால் சிறந்த அங்கீகாரத்தைப் பெற்ற நடன இயக்குநர் சாண்டி, தமிழ் சினிமாவிலும் கால் பதித்து வெற்றி பெற்றுள்ளார். ரஜினியின் காலா படத்தில் பணியாற்றிய இவர், பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, அங்கு பாடல்கள், நடனம் என ஜாலி ரகளைகளின் மூலம் பிரபலமானார்.
சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து அங்கு நடந்த செயல்களை வைத்து சாண்டி பாடிய பாடல்களுக்கு ரசிகர்கள் இருந்தனர். அதோடு அவரது மகள் லாலாவும் எல்லோருக்கும் பரிச்சயமானார். அதோடு சமீபத்தில் சாண்டி மற்றும் அவரது மனைவி சில்வியா இருவருக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாண்டியின் மனைவி சில்வியா, அவ்வப்போது லாலாவின் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துக் கொள்வார். இதற்கிடையே ஒருவர், குழந்தை ஏன் குண்டாக இருக்கிறது என்றும், ஒல்லியாக இருந்தால் தான் சாண்டி மாதிரி நன்றாக டான்ஸ் ஆட முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்த சில்வியா, “இதைப் பற்றி கேள்வி கேட்டால், பாடி ஷேமிங் ஆதரவாளர்கள் இந்த நபருக்கு ஆதரவளிப்பார்கள். எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அது ஏன்? எப்போதும் ஒரு பெண் மற்றொரு பெண்ணை பற்றி தவறாக பேசுகிறாள்? அவள் ஒரு குழந்தை. இப்போதே சமூகத்தின் அழுத்தம் தொடங்கியது. நமது எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil