’சகிச்சுகிட்டது போதும்...’ மீரா மிதுன் கைது குறித்து பிக் பாஸ் பிரபலத்தின் ரியாக்‌ஷன்!

மீரா மிதுன்

மீரா மிதுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் அட்டவணை சாதி மற்றும் பட்டியல் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 • Share this:
  தமிழ்நாடு போலீஸ் மற்றும் சைபர் கிரைமை நினைத்து தான் பெருமைப்படுவதாக மீரா மிதுன் கைது குறித்து நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

  பிக் பாஸ் தமிழ் நடிகை மீரா மிதுன், பட்டியல் சாதி சமூகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து அவர் மேல் பல புகார்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை போலீசாரால் ஆகஸ்ட் 14 அன்று கைது செய்யப்பட்டார் மீரா மிதுன். தற்போது அவர் சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தால், ஆகஸ்ட் 27 வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  சர்ச்சைக்குரிய கருத்துக்களால் மட்டுமே பிரபல நடிகை, சாதி வெறியோடு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் திரைப்படத் துறையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மீரா மிதுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் அட்டவணை சாதி மற்றும் பட்டியல் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  Sanam Shetty on Meera Mithun Arrest, meera mithun, meera mitun, meera mithun instagram, meera mithun twitter, meera mithun cast, meera mithun husband name, meera mithun movie list tamil, meera mithun latest news, meera mithun youtube channel, meera mithun arrest, meera mithun age, meera mithun biography, meera mithun arrest news, மீரா மிதுன் கைது குறித்து சனம் ஷெட்டி, மீரா மிதுன், மீரா மிதுன் கைது, மீரா மிதுன் இன்ஸ்டாகிராம், மீரா மிதுன் ட்விட்டர், மீரா மிதுன் நடிகர், மீரா மிதுன் கணவர் பெயர், மீரா மிதுன் திரைப்பட பட்டியல் தமிழ், மீரா மிதுன் சமீபத்திய செய்தி, மீரா மிதுன் யூடியூப் சேனல், மீரா மிதுன் கைது செய்தி, மீரா மிதுன் வயது, மீரா மிதுன் வாழ்க்கை வரலாறு
  சனம் ஷெட்டி - மீரா மிதுன்


  இதையடுத்து கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை, தமிழக சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இதற்கு ரியாக்ட் பண்ணும் விதமாக, ”சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தத தமிழக காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவை நினைத்து பெருமைப்படுகிறேன். கடந்த சில வருடங்களாக நாம் சகித்துக்கொண்ட அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களும் முடிவடைந்த நேரம் இது” என பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையுமான சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: