Amman Serial: கலர்ஸ் தமிழ் அம்மன் சீரியலில் பிக் பாஸ் சம்யுக்தா!

Amman Serial: கலர்ஸ் தமிழ் அம்மன் சீரியலில் பிக் பாஸ் சம்யுக்தா!

அம்மன் சீரியலில் சம்யுக்தா.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் தொடரில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார் பிக் பாஸ் சம்யுக்தா.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் தொடரில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார் பிக் பாஸ் சம்யுக்தா.

    திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி தொடர் அம்மன். இந்த தொடரை ஐ.அஹ்மத் என்பவர் தயாரிக்க, ரவி பிரியன் என்பவர் இயக்கி வருகிறார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பவித்ரா கெளடா நடிக்க, அவருக்கு ஜோடியாக ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அமல்ஜித் என்பவர் நடிக்கிறார். அம்மன் தொடரின் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட ஒரு சிறிய நகரப் பெண்ணான சக்தியைச் சுற்றி நகர்கிறது.

    தற்போது சக்தி யார் கண்ணுக்கும் தெரியாமல், தியானம் செய்துக் கொண்டிருக்கிறாள். அவளை தேடி ஈஸ்வர் அலைந்துக் கொண்டிருக்கிறான். சக்தியின் அம்மா லட்சுமியோ காட்டுக்குள் சென்று அங்குள்ள சித்தரிடம் சக்தியைப் பற்றி விசாரிக்கிறார். அவள் பாதுகாப்புடன் இருப்பதாகவும், பயப்பட தேவையில்லை எனவும் லட்சுமியை சமாதானப்படுத்துகிறார் சித்தர். அதோடு உதவி செய்வதற்காக தாமினி எனும் இச்சாதாரி நாகத்தை உடன் அனுப்புகிறார்.

    இப்போது சக்தியை காப்பாற்றி 7-வது கேட்டுக்கு செல்ல வேண்டும். எப்படி காப்பாற்றுவது என தவித்துக் கொண்டிருக்கையில், அந்தக் காட்டுக்குள் ரொம்ப வருடங்களாக சிவனுக்கு பூஜை செய்யும் ருத்ரா (சம்யுக்தா) என்பவளை தேடி ஈஸ்வர், தாமினி எல்லோரும் போகும்படி கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ருத்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா 2 வாரங்களுக்கு அம்மன் சீரியலில் பயணிப்பார். வரும் திங்கட்கிழமை முதல் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், சீரியலில் இடம்பெறும்.






    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: