Home /News /entertainment /

Bigg boss : லாஸ்ட் பென்ச் சிபி ஹீரோவான கதை.. எல்லா புகழும் அக்‌ஷராவையே சேரும்

Bigg boss : லாஸ்ட் பென்ச் சிபி ஹீரோவான கதை.. எல்லா புகழும் அக்‌ஷராவையே சேரும்

பிக் பாஸ் சிபி

பிக் பாஸ் சிபி

அக்‌ஷராவின் இவ்வளவு பெரிய சீனை ஹவுஸ்மேட்ஸ் கண்டுகொள்ளாமல் தங்களது டாஸ்கை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  பிக் பாஸ் வீட்டில் போன வாரம் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட் என பெயர் எடுத்த சிபியை, 52 ஆவது நாள் ஹீரோவாக்கினார் அக்‌ஷரா. கனா காணும் காலங்கள் டாஸ்கில் ஸ்கூல் வார்டன் ரோலில் சிபி நடிக்க, கடுப்பான அக்‌ஷரா பயங்கரமாக  பொறித்து தள்ள வீடே ரணகளம் ஆகியது. சமூக வலைத்தளங்களில் சிபிக்கே ஆதரவு குரல்கள் ஒலிக்கின்றன. டாஸ்கை அக்‌ஷரா பர்சனலாக எடுத்துக் கொள்வது தான் இதற்கு காரணம் என்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள், அதே நேரம் இவ்வளவு பிரச்சனையிலும் பொறுமையை இழக்காமல், மரியாதையுடன் பேசி இந்த பிரச்சனையை ஸ்மார்ட்டாக ஆண்டில் செய்த சிபிக்கு ஆதரவுகள் பெருகின்றன.

  பிக் பாஸ் வீட்டில் 52 ஆவது நாள் ஸ்கூல் டாஸ்கை குறிக்கும் வகையிலே பாடல் ஒலிக்கப்பட்டது. ஆனால் காலையிலே இப்படி வீடு பத்திக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை. எல்லா சீசனை விடவும் இந்த 5 ஆவது சீசனில் தான் ஹவுஸ்மேட்ஸ் அதிகமான பொருட்களை உடைத்து முரட்டு தனமாக நடந்து கொள்கின்றனர். வார்டன் சிபி திருக்குறள் டாஸ்க் கொடுக்க, எரிச்சலான அக்‌ஷரா, கடுப்பில் கத்தி விட்டு நேராக பாத்ரூம் செல்கிறார். அதுமட்டுமில்லை போற போக்கில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பூச்செடி தொட்டியையும் உடைக்கிறார்.

  இதை கவனித்த பாவனி, சைலண்டாக ஹார்ஸ்டைலில் கவனத்தை செலுத்துகிறார். இந்த விஷயத்தில் பாவனிக்கும் ஒருபக்கம் சந்தோஷம் தான். காரணம், அக்‌ஷராவிஉன் முகமூடி கிழிந்து உண்மை முகம் வெளி வந்துக் கொண்டிருக்கிறது. ”எனக்கு சண்டை போடவே வராது.. சண்டை போடுபவர்களை பார்த்தாலே பிடிக்காது. “ இது எல்லாமே கமல்ஹாசன் எபிசோடுகளில் அக்‌ஷரா உருட்டிய உருட்டுகள். ஆனால் அதற்கு அப்படியே நேர் மாறாக இருக்கிறது அக்‌ஷராவின் பிகேவியர். டாஸ்க்கை சுவாரசியம் குறையாமல் கண்டிப்பான ஸ்கூல் வார்டன் போல் எடுத்து செல்கிறார் சிபி. ஆனால் சிபி அதிகாரம் செய்வது பிடிக்காமல் தன்னையும் அடித்துக் கொண்டு, வீட்டில் இருக்கும் பொருட்களையும் உடைத்து களேபரம் செய்கிறார் அக்‌ஷரா.. போன சீசன் மகத்தை அடிக்கடி நினைவூட்டுகிறார்.

  ஆனால் அக்‌ஷராவின் அனைத்து ஆக்டிவிட்டீஸூம் சிபிக்கு சாதகமாக அமைவது தான் இதில் ஹைலைட். அதே போல், பாத்ரூமில் அபிநவ்விடம் அக்‌ஷரா சிபி பற்றி மரியாதை இல்லாமல் பேசியது, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியது எல்லாம் கேமிராவில் ரெக்கார்டு ஆகியது. வருணும், ஐக்கியும் சமாதானம் சொல்லி கூட அக்‌ஷரா சாமி மலை ஏறவில்லை. கடைசியில் வார்டன் சிபியே போய் பேசியும் பயனில்லை. அக்‌ஷராவின் இவ்வளவு பெரிய சீனை ஹவுஸ்மேட்ஸ் கண்டுகொள்ளாமல் தங்களது டாஸ்கை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

  பிக் பாஸ் கேமை சரியாக விளையாடுபவர்கள் யார்? டைட்டில் வின்னர் வாய்ப்பு யாருக்கு அதிகம்?

  அக்‌ஷராவின் அவன்  இவன் என்ற பேச்சு, சொற்கள் விநியோகம் எல்லாமே கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது. போன வாரம், கமலஹாசன், சிபியை காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேர்த்தார். எதற்கு இப்படி ஒரு அமைதி? என கேள்விகளை அடுக்கி இருந்தார். இதற்கு சிபி எந்த ஒரு எஃபர்ட்ட்டும் எடுக்காமலே அக்‌ஷரா மொத்தத்தையும் செய்து கொடுத்து விட்டார். சிபிக்கு ஃபேன்ஸ் பட்டாளம், ஆர்மிகள் அதிகரித்துள்ளன.  அதே நேரம், பிக் பாஸ் அண் சீன் கண்டெண்ட்டை பார்த்தால் சிபி மீது தான் அதிகம் தவறு இருப்பது போலவும் தோண வைக்கிறது. மற்ற மாணவர்களை விட சிபி, அக்‌ஷராவை வச்சி செய்தது, திருக்குறளை விடாமல் ஒப்பிக்க வைத்தது, 11 மணி வரை மார்னிங் பிரேக் ஃபாஸ்டை சாப்பிட விடாமல் செய்தது, குளிக்க டைம் கொடுக்காமல் டைம் வேஸ்ட் பண்ணது என சிபி மேலேயும் கேஸ்கள் இருக்கின்றன. ஆனால் ஒளிப்பரப்பான எபிசோடில் அக்‌ஷரா தான் கோபக்காரி போல் தெரிவதலால் சிபிக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அண் சீனை விட எபிசோடு பார்ப்பவர்கள் தானே அதிகம். சோ அதன் தாக்கம் சிபிக்கு ஆதரவாக இருக்கிறது. உண்மையில் யார் மீது தவறு? யார் செய்தது சரி? என்பது வார இறுதியில் தெரிய வரும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vijay tv

  அடுத்த செய்தி