• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உடல் நலக்குறைவால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிரபலம்

உடல் நலக்குறைவால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிரபலம்

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரபலம் ஒருவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  • Share this:
    சிறுநீரகத்தில் கல் பிரச்னையால் பிக் பாஸ் பிரபலம் ஒருவர், அந்நிகழ்ச்சியிலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    ரசிகர்கள் பெரிதும் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது பிக் பாஸ். தற்போது விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகிய மூவரும் அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

    தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரபலம் ஒருவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இது தமிழ் பிக் பாஸில் இருந்து அல்ல. இந்தியில் பிக் பாஸ் 15 சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Viral Bhayani (@viralbhayani)






    அதில் Raqesh Bapat என்ற போட்டியாளர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல் பிரச்சனையால் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: