Home /News /entertainment /

ரன்பீர் கபூருக்கு தமிழ் சொல்லி கொடுத்து சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் ராஜூ.. மன்னிப்பு கேட்டார்!

ரன்பீர் கபூருக்கு தமிழ் சொல்லி கொடுத்து சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் ராஜூ.. மன்னிப்பு கேட்டார்!

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் ராஜூ

புரமோவிலே ராஜூவுக்கு எதிராக நெகடிவ் கமெண்டுகள் பதிவு செய்யப்பட்டன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் சென்னை மக்களை இழிவுப்படுத்தியதாக வெடித்த சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிக்கத் தொடங்கி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தொலைக்காட்சியில் வலம் வருகிறார் ராஜூ ஜெயமோகன். ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் கவினின் நண்பராக நடித்த ராஜு, அதன் பிறகு ‘ஆண்டாள் அழகர்’, ‘பாரதி கண்ணம்மா’ உள்ளிட்ட சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். அதுமட்டுமில்லை கவின் மற்றும் அருண்ராஜா காமராஜ் நடித்த 'நட்புனா என்னான்னு தெரியுமா' படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகமாகும் முன், நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

    செம்பருத்தி ஷபானாவுக்கு அடுத்த சீரியலில் இவர் தான் ஜோடி!

    இத்தனை ஆண்டு உழைப்புக்கு பின்பு ராஜூவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய அங்கீகாரத்தை வாங்கி தந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5ல் ராஜூ டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சொல்லப்போனால் விஜய் டிவியே ராஜூவை விடுவதாக இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை பிரியங்காவுடன் சேர்ந்து ஆங்கரிங் செய்தார். அதனைத்தொடர்ந்து ராஜூ வூட்ல பார்ட்டி என்ற பெயரில் ராஜூவுக்காக தனி ஷோவே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் வார வாரம் என்ட்ரி கொடுக்கிறார்கள்.

    ravindar : : தள்ளிப்போன திருமணம்.. உண்மையான காரணத்தை சொன்ன மகாலட்சுமி கணவர் ரவீந்தர்!

    இப்படி ராஜூ ஜெயமோகனின் கெரியர் கிராஃப் சீராக செல்ல, நடுவில் சிக்கலில் மாட்டிக் கொண்டார் ராஜூ பாய். சமீபத்தில் நடந்து முடிந்த பிபி ஜோடிகள் 2 ஃபனல்ஸில் சிறப்பு விருந்தினராக ரன்பீர் கபூர், ராஜ மெளலி, நாகார்ஜுனா ஆகியோர் வருகை தந்தனர். இவர்களிடம் ஆங்கர் பிரியங்கா மற்றும் ராஜூ சில கேள்விகளை கேட்டனர்.



    அதன்பின்பு ரன்பீருக்கு ராஜூ தமிழ் சொல்லி  கொடுத்தார். அப்போது வட்டார மொழி என்ற பெயரில் சென்னை தமிழ், மதுரை தமிழ், கோயம்புத்தூர் பாஷை என ஒவ்வொரு விதமாக ரன்பீருக்கு கிளாஸ் எடுத்தார். இதில் தான் சர்ச்சை வெடித்தது. சென்னை பாஷை என்று ராஜூ சொல்லி கொடுத்தது சென்னை மக்களை இழிவுப்படுத்தும் தோரணையில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்ய தொடங்கினர். இதுக் குறித்த  புரமோவிலே ராஜூவுக்கு எதிராக நெகடிவ் கமெண்டுகள் பதிவு செய்யப்பட்டன.



    இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரச்சனையை முடித்துள்ளார் ராஜூ. இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜூ வெளியிட்டு இருக்கும் பதிவில், “ திரு.ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக்குடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சனம் எழுவதை படித்தேன். நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்க்காக வருந்துகிறேன்… இரிடேட் ஆகவேண்டாம், மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டுள்:ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி