பிக் பாஸ் ராஜு மீண்டும் விஜய் டிவி-யின் முக்கிய சீரியல் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நடந்து முடிந்த பிக் பாஸ் 5-ம் சீசனில் சுமார் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் வெளியேறிய நிலையில், இறுதி சுற்றுக்கு 5 பேர் மட்டுமே மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் போலவே இந்த முறையும் போட்டியாளர்களுக்குள் கடும் போட்டி நிலவி வந்தது.
கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் இறுதியாக ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் மீதமிருந்தனர். இவர்களுக்குள் பல முனை போட்டிகள் நடந்து வந்தது. யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்தபோது, மக்களுக்கு அதிகம் பிடித்த ராஜு வெற்றி பெற்று கோப்பையை வாங்கினார். இவருக்கு அடுத்ததாக பிரியங்கா இரண்டாவது இடம் பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ராஜு. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதும், அந்த சீரியலில் அவரது கதாபாத்திரம் கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக காட்டப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததையடுத்து, மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ராஜு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!
ஆனால், தான் இனிமேல் சினிமாவில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறிய ராஜு, அதனால் சின்னத்திரைக்கு குட் பை சொல்லவிருப்பதாகக் கூறினார். இதற்கிடையே
பிக் பாஸ் 5-ல் கலந்துக் கொண்ட எந்த போட்டியாளரும் இன்னும் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. அல்லது அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லையா எனத் தெரியவில்லை.
ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு
இந்நிலையில்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் நடிகர்களுடன் ராஜு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆகையால் அவர் அந்த சீரியலில் ஏதேனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாரா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.