Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: சிவகார்த்திகேயன் படத்தில் பிக் பாஸ் பிரபலம்!

Bigg Boss Tamil 5: சிவகார்த்திகேயன் படத்தில் பிக் பாஸ் பிரபலம்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

எஸ்.ஜே.சூர்யா, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த் மற்றும் சிவாங்கி ஆகியோரும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிவகார்த்திகேயன் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இரண்டாவது வாரத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சி சூடுபிடித்து வருவதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 18 ஆரம்ப போட்டியாளர்களில், நமீதா மாரிமுத்து மருத்துவ காரணங்களால் வெளியேறியதால் தற்போது 17 பேர் போட்டியில் இருக்கிறார்கள். அதோடு இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற எட்டு பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சீசனில் பெரும்பான்மையான பெண் போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களில் பாவனி ரெட்டி, பிரியங்கா, இசைவாணி, தாமரை செல்வி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆண் போட்டியாளர்களில் நடிகர் ராஜு ஜெயமோகன் நகைச்சுவையுடன் விளையாடி வருகிறார்.

    இப்போது பரபரப்பான செய்தி என்னவென்றால், சிவகார்த்திகேயன்-பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள 'டான்' திரைப்படத்தில் ராஜூ ஜெயமோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர எஸ்.ஜே.சூர்யா, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த் மற்றும் சிவாங்கி ஆகியோரும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    Bigg Boss Raju Jeyamohan in Sivakarthikeyan don movie, Sivakarthikeyan Don movie, sivakarthikeyan, sivakarthikeyan don, don movie, sivakarthikeyan don, சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் டான் படம், சிவகார்த்திகேயன் டான், சிவகார்த்திகேயன் டான் படப்பிடிப்பு, நடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் படங்கள், sivakarthikeyan don, sivakarthikeyan raju jeyamohan
    ராஜு


    ராஜூ ஜெயமோகன் 2012-ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கானா காணும் காலங்கள்' என்ற சீரியலில் நடித்தார். பின்னர் ’கல்லுாரி சாலை ', 'ஆண்டாள் அழகர்', 'சரவணன் மீனாட்சி' மற்றும் 'பாரதி கண்ணம்மா' போன்ற பல சீரியல்களிலும் நடித்தார். அதோடு 2019-ஆம் ஆண்டு கவின் மற்றும் அருண்ராஜா காமராஜின் நெருங்கிய நண்பராக 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் நடித்து பெரிய திரையில் ராஜு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி