அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் அன்புடன் பழகி வந்த ராஜு ஜெயமோகன், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வந்த நிலையில், இறுதியாக பிக்பாஸ் பட்டத்தையும் அவரே தட்டிச் சென்றார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதம் ஆகியும் கூட அதுதொடர்பான ட்ரெண்டிங் செய்திகள் இன்னமும் ஓயவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பவானி, தாமரை, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் அன்புடன் பழகி வந்த ராஜு ஜெயமோகன், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வந்த நிலையில், இறுதியாக பிக்பாஸ் பட்டத்தையும் அவரே தட்டிச் சென்றார். பிக்பாஸ் பட்டம் வென்ற பிறகு அதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ராஜு ஜெயமோகன், வாழ்க்கையில் தான் பொறுமையை கடைபிடித்து வருவதற்கான அடையாளமாக இந்த வெற்றி இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இதுமட்டுமல்லாமல், வெற்றியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் நெருங்கிப் பழகிய இமான் அண்ணாச்சியை சந்தித்து ராஜு வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து, அமீர், பாக்கியராஜ், நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட பலரை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவர்களின் பாராட்டுகளையும் ராஜு பெற்று வருகிறார்.
இதற்கிடையே பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்வது, கேக் வெட்டி கொண்டாடுவது என்று தொடர் மகிழ்ச்சி, ஆரவாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற போட்டியாளர்களே மிகுந்த கலகலப்புடன் உலா வரும் போது, பிக் பாஸ் டைட்டில் பட்டம்பெற்ற ராஜு ஜெயமோகன் சும்மா இருப்பாரா என்ன? எல்லோரையும்விட செம கலக்கலான கொண்டாட்டங்களை அவர் நடத்தி வருகிறார். அமீர் மற்றும் அவரது குடும்பத்தினர், மற்ற போட்டியாளர்களான நாடியா சாங், தாமரை உள்ளிட்ட பலர் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
துரத்தாதய்யா என்ற கானா பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அமீர் மற்றும் ராஜு உள்ளிட்ட சிலர் இணைந்து செம குத்தாட்டம் போட்டு டான்ஸ் ஆடினர். இந்த நிகழ்வு முழுவதையும் தாமரை தனது போனில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பாக ஏற்கனவே நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் - 2 போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர். ராஜு ஜெயமோகனுக்கு இப்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற கூடுதல் மகுடமும் கிடைத்து விட்ட நிலையில், மீண்டும் சீரியல் நிகழ்ச்சிகளில் ரீ-என்ட்ரி கொடுக்க ராஜு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஏற்கனவே அளித்த பேட்டியில் வெள்ளித்திரை வாய்ப்புகள் வருவதால் சீரியலில் நடிப்பது குறித்து யோசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடிப்பதற்கும் அவர் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் டைட்டில் வென்ற கையோடு சீரியல், திரைப்படம் என்று அடுத்தடுத்து அவர் பிஸியாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.