• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் ராஜுவுக்கு பிகில் ஸ்டைலில் வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்!

பிக் பாஸ் ராஜுவுக்கு பிகில் ஸ்டைலில் வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்!

ராஜு ஜெயமோகன்

ராஜு ஜெயமோகன்

'நட்புனா என்னான்னு தெரியுமா' படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகமாகும் முன், நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ராஜு.

  • Share this:
    பிக் பாஸ் ராஜு ஜெயமோகனுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ‘பிகில்’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் ஐந்தாவது சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. கலந்துக் கொண்ட 18 போட்டியாளர்களில் தற்போது 14 பேர் வீட்டில் இருக்கிறார்கள்.

    இதில் விஜய் டிவி பிரபலம் ராஜு ஜெயமோகன் குறிப்பிடத்தகுந்தவர். 'கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிக்கத் தொடங்கி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தொலைக்காட்சியில் வலம் வருகிறார். இதைத் தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் கவினின் நண்பராக நடித்த ராஜு, அதன் பிறகு ‘ஆண்டாள் அழகர்’, ‘பாரதி கண்ணம்மா’ உள்ளிட்ட சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார்.

    கவின் மற்றும் அருண்ராஜா காமராஜ் நடித்த 'நட்புனா என்னான்னு தெரியுமா' படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகமாகும் முன், நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

    Bigg Boss Raju Jeyamohan, raju jeyamohan, raju jeyamohan wife, raju jeyamohan height, raju jeyamohan vijay tv, raju jeyamohan wiki, raju jeyamohan wife tarika, raju jeyamohan serial list, raju jeyamohan instagram, raju jeyamohan marriage, ராஜு ஜெயமோகன், ராஜு ஜெயமோகன் விஜய் டிவி, பிக் பாஸ் ராஜு ஜெயமோகன், ராஜு ஜெயமோகன் சீரியல்
    ராஜு ஜெயமோகன்


    கடந்த ஆண்டு தாரிகா என்பவரை ராஜூ திருமணம் செய்து கொண்டார். இது ஒரு காதல் திருமணம். தற்போது தங்களின் முதல் திருமணநாளை ஒன்றாக அவர்களால் கொண்டாட முடியவில்லை. பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ராஜூவுக்கு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: