• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பிக் பாஸ் ராஜூ மீது பாவனியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. விசாரணை கமிஷன் எப்ப பாஸூ?

பிக் பாஸ் ராஜூ மீது பாவனியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. விசாரணை கமிஷன் எப்ப பாஸூ?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss raju bigg boss tamil 5 Day 12 Review : அதை பற்றி பிக் பாஸ்யிடம் முறையிட்டார். ஆனால் நோ யூஸ்.

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5ல் ரசிகர்களின் ஏஞ்சலான பாவனியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறார் ராஜூ பாய். முதல் விசாரணை கமிஷன் ராஜூ பாய் மீது தான் பாயும் போல.

  காலை 8 மணிக்கு பேட்ட படத்தின் ஓப்பனிங் சாங், ‘தடலாட்டம் தாங்க’ பிளே செய்யப்பட்டது. ரஜினி சாங் என்பதால் ராஜூ பாய் களத்தில் இறங்கினார். அவருடன் சிபியும் கைக்கோர்க்க மாஸ் பாடலுக்கு மாஸாக இல்லையென்றாலும் சுமாராக ஆடினர். இந்த அக்‌ஷராகிட்ட கத்துக்க நிறைய இருக்கு. அதுல முக்கியமானது ஒரே இடத்துல ஒரே ஸ்டெப்ப, பாடல் முடியுர வரைக்கும் ஃபாலோ பண்றது.சாங் முடிஞ்சதும் பாட்னர்ஸ் ஆன பிரியங்காவும் சினிமா பையன் அபியும் பாத்ரூமில் பயங்கரமாக டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர். இருவரின் தந்தை மரண தேதிகளும் ஒத்து போக இருவரின் சூழ்நிலையும் ஒன்று தான் என்பது போல் பேசினார் பிரியங்கா. அம்மா மீது பிரியங்காவுக்கு ரொம்ப பாசம் போல. எந்த இடத்திலும் அவரை குறித்து பேசாத தருணங்களே இல்லை. இந்த நேரத்தில் தான் பிரியங்கா ஒரு முக்கியமான சக்தி அவரிடம் உள்ளதை குறிப்பிட்டார். அவங்க அப்பா இறப்பதற்கு முன்பு அதே மாதிரி கனவு வந்ததாம், சுனாமிக்கு முந்தைய நாள் அதே போல் கனவு வந்தது இந்த கனவு இந்தியாவோட நின்றுவிடவில்லை. சீனா நிலநடுக்கம் வரை சென்றுள்ளது.

  பாத்ரூம் மீட்டிங்கை முடித்து விட்டு பெட்ரூம் வந்த பிரியங்கா அடுத்து பெண்களுடன் ஒரு மீட்டிங்கை போட்டார். இந்த முறை விஷயம் கொஞ்சம் பெருசு தான். இமான் அண்ணாச்சி பற்றி இசைவானி பிரியங்காவிடம் கதறி இருக்கிறார். இதுப்பற்றி ஐக்கி, மதுமிதாவுடன் ஷேர் செய்த பிரியங்கா, நகைச்சுவையாக இருந்தாலும் பிறரை துன்புறத்த கூடாது என்கிறார், (சூப்பர் சிங்கரில் பிரியங்கா செய்த பாடி ஷேமிங் எல்லாம் மறந்து போச்சு போல) அடுத்தது லிவிங் ஏரியாவில் மதுமிதாவுக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ். இரட்டை அர்த்தம் வரும் பாடல்களுக்கு இங்கிலீஷ் விளக்கம் சொல்லி கொடுத்தார் ராஜூ பாய். இப்படியெல்லாம் பாடல் வரும் என்றே சந்தேகத்துடனே ராஜூவை பார்த்தார் மதுமிதா.

  கதை சொல்லட்டுமா டாஸ் தொடங்கியது. (இன்னுமா இது முடியல என்கின்றனர் ரசிகர்கள்.. சேம் ஃபீலிங்ஸ்) நிரூப் கதை சொல்ல தொடங்கினார். யாஷிகாவால் கிடைத்த வாய்ப்பு. சினிமாவில் வாய்ப்பு தேடி ரிஜட் செய்யப்பட்டது. டிப்ளமோ படிக்கும் போது தமிழ் தெரியாது போல் நடித்தது என புரமோவில் காட்டிய அதே கண்டெண்ட் தான். ஒரு பொண்ணால வளர கூடாதா?ன்னு நிரூப் கேட்ட கேள்விக்கு கிளாப்ஸ் அள்ளுச்சு. (ஏற்கெனவே ரொம்ப வளர்ந்து தான்பா இருக்க, இன்னும் வளரனுமா) நிரூப் கதைக்கு பிரியங்காவின் அன்பு முத்தம் கிடைத்தது. லைக்ஸ், ஹார்ட் ஸ்டிக்கர்கள் இல்லாததால் போட்டியாளர்கள் டிஸ்லைக் ஸ்டிக்க்ரையே கொடுத்தனர்.

  அடுத்தது ஜெமினி - சாவுத்திரி பேரன் அபிநவ் கதை சொல்ல தொடங்கினார். உண்மையில் அவருக்கு சரியாக கதை சொல்ல வரவில்லை. தன் மனைவியால் தான் இப்போது இங்கு அவர் இருப்பதாக, தனக்கு எதுவுமே வராது என மிகவும் தாழ்ந்த மனபான்மை கொண்டவன் என்று தன்னை பற்றி குறிப்பிட்டார். இராமானுஜன் படத்தின் வாய்ப்பு கிடைத்த கதை, சாவித்திரிக்கு தெலுங்கில் இருக்கும் மிகப் பெரிய பெயர், ஒரு மிகப் பெரிய படத்தில் இருந்து அபிநவ் பாதியிலேயே நீக்கப்பட்டது என வெற்றிக்காக போராடும் தனது நிலைமையை கண்ணீருடன் விவரித்தார்.வழக்கம் போல் டிஸ்லைக்ஸ் மட்டுமே கிடைத்தது. காரணம், வேற ஸ்டிக்கர்ஸ் இல்லை. ஆனால் நாடியாவுக்கு டிஸ்லைக் தர விருப்பமில்லை. அதை பற்றி பிக் பாஸ்யிடம் முறையிட்டார். ஆனால் நோ யூஸ்.

  அக்‌ஷ்ரா மேக்கப் போடுவதை ஜூமில் காட்டினார் பிக் பாஸ்.. அதிலும் அவர் லிப்ஸ்டிக் போட்டது 5 நிமிடம் வரை போக அதை அப்படியே காட்டிக் கொண்டிருந்தார் . (யாராவது பர்சனலா ரிக்யூஸ்ட் பண்ணாங்கலானு தெரியல). அவசர அவசரமாக வெளியே வந்தவர் அபிநவ் சொன்ன கதைக்கு பாராட்டு தெரிவித்தார். அடுத்தது நாடி ஜோசியர் அபிஷேக், நாடியா பற்றி தான் கணித்தது மிக சரியானது என்று தற்பெருமை பேசி கொண்டிருந்தார்.(வேற வேலையே இல்லை)

  நெக்ஸ்ட், நாடியா சென் தனது வாழ்க்கை கதையை கூறினார். 16 வயதில் அம்மாவின் அடி உதையில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரை கரம் பிடிக்கிறார்.அவர் தான் சென். நாடியாவின் கணவர். அங்கிருந்து தொடங்கிய அவர் தனது கணவருக்காக மட்டுமே வாழ்ந்து வருவதாகவும், அவர் இல்லை என்றால் உயிரையே விட்டுவிடுவேன் என்றார். இளம் வயதில் படிக்கவில்லை, அம்மாவின் கொடுமை, போலீஸிடம் அடி என ரணமான வாழ்க்கையை வாழ்ந்தவர், கணவர் சென்னை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் கதை ஐக்கி பெர்ரியை மிகவும் பாதிக்க, புலம்பி அழுதார். இதைப்பற்றி இமான் அண்ணாச்சி பாவனி, தாமரை டிஸ்கஸ் செய்தனர். தாமரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதே பாவனிக்கு கதை சொல்லும் புரியவில்லையாம். அண்ணாச்சி தான் அதை விளக்கினாராம். உடனே தாமரை “எனக்கு நீண்ட நாள் ஆசை 10 சவரனில் தாலி போட வேண்டும்” என்பது தான் என்றார். உடனே பாவனி தாலி பற்றி பேசாதம்மான்னு செண்டிமெண்ட் மோடுக்கு போனார். இவராச்சும் பரவாயில்லை, பிரியங்கா தனியாக உட்கார்ந்து கொண்டு சென் போல் ஒரு கணவன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றார். யாரை சொல்கிறார் பிரியங்கா என புரியவில்லை. ஆனால் வெளியில் சொல்லாத ஏதோ ஒரு ரகசியம் இருக்கு. பிரியங்கா கணவர் பிரவீன் எங்கே?

  சினிமா ஆசையில் வீட்டை விட்டு வந்தவர்.. இன்று அதே சினிமாவால் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் ராஜூ!

  கார்டன் ஏரியாவில் தலைவி தாமரை செல்வி தூங்க நாய் போட்டு கொடுத்தது. மொத்த போட்டியாளர்களும் தாமரையை கலாய்க்க தொடங்கினர். தலைவரே இப்படியா? கண்டிப்பா வார இறுதியில் கமல்ஹாசன் இதைப் பற்றி பேசுவார் (ஒரு நல்ல தலைவருக்கான அடையாளம் என்ன என்ற அரசியலும் அதில் இருக்கும்). தூக்கத்தை கலைக்க ராஜூ பாய் தாமரையிடம் பேச்சு கொடுக்க தொடங்கினார். தாமரையின் சொந்த கதை, சோக கதை, நாடக கதையை கேட்டார்.

  விஜயதசமி, ஆயுதபூஜை ஸ்பெஷலாக நாடக டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தந்துள்ளார். தாமரை தலைமையில் இந்த நாடகம் நடக்கவிருக்கிறது. இதுக் குறித்து ஸ்கிரிப் ரைட்டர் ராஜூ பிஸியாக இருக்க, ராஜூ பற்றி அடுகடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து கொண்டிருந்தார் பாவனி,. என்ன விஷயம் என்றால் ராஜு பாய் குக்கிங்கில் எந்த வேலையும் செய்வதில்லை. எப்போதுமே தனது குழுவுடன் அரட்டையடித்து நேரத்தை போக்குவதாக ஸ்ருதி, இசைவாணியிடம் புலம்பி கொண்டிருந்தார். பாவனிக்கு அபிநவும் அட்வைஸ் செய்தார். எல்லா வேலையும் நீயே செய்தாதே என்றும் புத்திமதி சொன்னார். இதுக்குறித்த விசாரணை கமிஷனை பிக் பாஸ் பாஸ் கூடிய விரைவில் அரங்கேற்றுவார் என தெரிகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: