• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss : நிரூப்பை பார்த்து இசைவாணி சொன்ன அந்த ஒரு கமெண்ட்! பற்றி எரியும் பிக் பாஸ் வீடு!

Bigg Boss : நிரூப்பை பார்த்து இசைவாணி சொன்ன அந்த ஒரு கமெண்ட்! பற்றி எரியும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் நிரூப்

பிக் பாஸ் நிரூப்

ஒரு பெண்ணை இப்படி பிடித்து விளையாடுகிறாயே? அசிங்கமாக இலையா? என மிகவும் கோபமாக கேட்டார்.

  • Share this:
    பிக் பாஸ் 5 இரண்டாவது ப்ரோமோவில், இசைவாணி, நிரூப் குறித்து பேசுகிறார். நிரூப், ஐக்கியை கைப்பாவையாக பயன்படுத்தியதாக கூறுகிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" என்ற பெயரில் நடந்த இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்காக விளையாடாமல் மற்றவர்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும் என கூறப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர் குறிக்கும் வகையில் ஒவ்வொரு பொம்மை கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும். மணி அடித்ததும் போட்டியாளர்கள் அவர்களுடைய பொம்மையை விட்டுவிட்டு மற்றவர்கள் யாராவது ஒருவருடைய பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திற்குள் செல்ல வேண்டும்.

    இதில் கடைசியாக வரும் போட்டியாளர் கையில் இருக்கும் பொம்மையில் குறிப்பிட்டிருக்கும் நபர் வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. மேலும் போட்டியாளர்கள் மற்றவரின் பொம்மையை எடுக்காமல், தனது பெயர் இருக்கும் பொம்மையை எடுத்தால் அவர் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த போட்டியில் முதல் சுற்றில் தாமரை கடைசியாக வந்த நிலையில் அவரிடம் இருந்த பொம்மையில் பிரியங்காவின் பெயர் இருந்ததால், பிரியங்கா போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார். நிரூப் தடுத்ததால் தான் தன்னால் கூடாரத்திற்குள் விரைவாக வர முடியவில்லை என தாமரை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் தாமரையை கூரத்திற்குள் நுழைய விடாமல் நிரூப் தடுத்ததால் வாக்குவாதம் நடைபெற்றது. எனினும் பிரியங்கா கூலாக இருந்தார். ஒவ்வொரு சுற்றும் முடிந்த பின்னர் போட்டியில் இருந்து வெளியேறியவர் இந்த டாஸ்கில் தனது உதவியர் மற்றும் தன்னை தோற்கடிக்க நினைத்தவர்கள் பெயரை கூற வேண்டும் என பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதன்படி பிரியங்கா தான் வெற்றி பெற வேண்டும் என தாமரை நினைத்ததாகவும், நிரூப் தடுத்ததால் தான் நான் தோற்றேன் என்றும் கூறினார்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில், அனைவரும் ஒவ்வொரு பொம்மையை எடுத்து கொண்டு ஓடிய போது அக்ஷ்ராவை, நிரூப் கூடாரத்திற்குள் செல்ல விடமால் பிடித்து கொண்டார். எனினும் ஒருவழியாக அக்ஷ்ரா அதனை மீறி உள்ளே சென்று விட்டார். இந்த சுற்றில் ராஜு இறுதியாக வந்த நிலையில் அவரிடம் இருந்த பொம்மையில் சிபி பெயர் இருந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனிடையே அக்ஷ்ராவின் கையில் வருண் பொம்மை இருந்ததால் தான் அதனை நிரூப் தடுத்தார் என பிரச்னை ஏற்பட்டது. அப்போது அக்ஷ்ரா, நீ என்னை தடுத்தது தப்பு அல்ல ஆனால் ஓட விடாமல் பிடித்து கொண்டால் எப்படி செல்ல முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நிரூப், இது கேம் இப்படி தான் விளையாட முடியும் என விளக்கம் கொடுத்த நிலையில் இடையே குறுக்கிடட்ட வருண், ஒரு பெண்ணை இப்படி பிடித்து விளையாடுகிறாயே? அசிங்கமாக இலையா? என மிகவும் கோபமாக கேட்டார்.

    முழுசா சந்திரமுகியா மாறுன அக்‌ஷரா... பீப் போட வைத்த நிரூப் - வருணின் சண்டைகள்!

    மேலும் நான் ஜாலியாக தான் விளையாடினேன், நீ இப்படி அசிங்கமாக விளையாடினால் நானும் அப்படி தான் விளையாடுவேன் என வருண் ஆக்ரோஷமாக பேசினார். இதனை தொடர்ந்து நிரூபிற்கு ஆதரவாக பேசிய சிபி, செண்பகமே செண்பகமே டாஸ்கில், அக்ஷ்ராவும் இப்படி தானே செய்தார், அது தப்பு இல்லை என்றால் இதுவும் தப்பு இல்லை என்கிறார். இந்த பிரச்னையில் ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தை பேசியதால் அடிக்கடி பீப் ஒலி ஒலித்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது சுற்றில், இமான் தாமதமாக வந்ததால் அவர் கையில் ராஜு பொம்மை இருந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். தான் தோற்றதற்கான காரணம் குறித்து விளக்கிய ராஜு, சிபி தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்தார் என்றார். மேலும் தான் தோற்றது குறித்து பேசிய ராஜு, மிகவும் வேடிக்கையாக பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். பின்னர் நடைபெற்ற நான்காவது சுற்றில், அக்ஷ்ரா, வருண் மற்றும் தனது பொம்மை என இரண்டு பொம்மைகளை எடுத்து கொண்டு ஓடினார். இதனால் தனது பொம்மையை தானே எடுத்ததால் வருண் மற்றும் அக்ஷ்ரா இருவரும் வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார். இந்த டாஸ்கில் இதுவரை 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது நிரூப், ஐக்கி, பாவ்னி, மதுமிதா, தாமரை, இமான், இசை, அபினய் ஆகியோர் உள்ளனர்.

    இந்நிலையில் இன்றும் இந்த டாஸ்க் தொடங்கப்படுவது இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்களில் தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இசைவாணி, நிரூப் குறித்து பேசுகிறார். நிரூப், ஐக்கியை கைப்பாவையாக பயன்படுத்தியதாக இசை கூறிய நிலையில், அப்போ அபினய்-க்கு நீ கைப்பாவையா? என நிரூப் கேட்கிறார். இதனை கேட்ட அபினய், நிருப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள காட்சிகள் உள்ளது. இந்த டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக ஹவுஸ் மேட்ஸிடம் இணைந்து தான் விளையாடினர். இசைவாணி - அபினய், நிரூப் - ஐக்கி, வருண் - அக்ஷ்ரா, ராஜு - இமான் - சிபி, பிரியங்கா - தாமரை  - பாவ்னி என கூட்டு சேர்ந்து தான் பொம்மையை எடுக்க வேண்டும் என பேசி கொண்டு விளையாடினர். இந்த நிலையில் இசை, நிரூப்பை விமர்சனம் செய்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய ப்ரோமோவில் இதே டாக்கில் இமான் அண்ணாச்சி - இசைவாணி இடையே பிரச்னை ஏற்படும் காட்சிகள் இருந்தது. இதனால் இன்றும் இதே டாஸ்க் நடைபெறும் என்பதால் இதில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: