• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • bigg boss promo : அதிரடி அறிவிப்பு.. தலைகீழாக மாறும் பிக் பாஸ் வீடு!

bigg boss promo : அதிரடி அறிவிப்பு.. தலைகீழாக மாறும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

நாணயத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு அதனை விட்டு கொடுப்பார்களா?

  • Share this:
    கடந்த மூன்று நாட்களாக விடிய விடிய நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில் யார் வெற்றி பெறுவார்? என்பது இன்று தெரியவரும்

    விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது 16 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த நாமினேஷன் லிஸ்டில் மாற்றத்தை கொண்டுவரும் வகையில் ஒரு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், பஞ்சதந்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இதில் விலை மதிக்க முடியாத நிலம், ஆகாயம், நீர், நெருப்பு, காற்று என 5 நாணயங்கள் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் , ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

    இந்த டாஸ்க் கடந்த செவ்வாய்கிழமை முதல் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில், தாமரை, நிரூப், பாவ்னி, இசைவாணி மற்றும் வருண் ஆகியோரிடம் தலா ஒரு நாணயம் இருந்தது. இந்தநிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில், தாமரை, நிரூப், பாவ்னி, இசைவாணி மற்றும் வருண் ஆகியோர் தங்களது நாணயங்களுடன் சக போட்டியாளர்கள் முன்னிலையில் நிற்கின்றனர். அப்போது இந்த நாணயம் வைத்திருக்கும் நபர் தங்களையோ, தான் விரும்பும் நபரையோ காப்பாற்றலாம்.

    பிரியங்காவுக்கு வார்னிங் கொடுக்கும் ராஜூ பாய்.. ஓ கதை அப்படி போகுதா?

    தலைவர் போட்டியில் தேர்வாகும் நபரின் பதவியை பறித்து உடனடியாக தன்னையோ, தனக்கு வேண்டிய நபரையோ தலைவராக நியமனம் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அதிரடியாக அறிவிக்கிறார். இதனை தொடர்ந்து பாவ்னி மற்றும் அபிஷேக் யாரை காப்பாற்றலாம் என தனியாக பேசி கொண்டிருக்கின்றனர். அதேபோல ஐக்கி, தாமரை, இமான் மூவரும் ஒன்றாக பேசும் காட்சிகளும் உள்ளது. இந்த டாஸ்க் நடைபெற்ற போது, பிரியங்கா, நிரூப் ஆகியோர் தாமரையை காப்பாற்றலாம் என பேசி கொண்டிருந்தனர், அதேபோல சிலர் சின்னபொண்ணுவை காப்பாற்றவும் நினைத்தனர்.



    இந்தநிலையில் வீட்டின் தலைவர் பதவியை பறித்து உரிமை வெற்றி பெறுபவருக்கு கொடுக்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி இருப்பதால் தற்போது நாணயத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு அதனை விட்டு கொடுப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டின் தலைவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதாலும், நாமினேஷனில் விடுவிக்கப்படுவதாலும் இந்த டாஸ்க் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக விடிய விடிய நடைபெற்ற இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என்பது இன்று தெரியவரும் என்பதால் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: