• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss : பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய மாற்றம்.. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு

Bigg Boss : பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய மாற்றம்.. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு

பிக்பாஸ்

பிக்பாஸ்

Bigg Boss Tamil Season 5 : தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோட் தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கியது. உலக நாயகனின் பேச்சு மற்றும் அங்கு நடக்கும் சண்டைகள் மக்களை தொடர்ந்து தன் வசம் இழுத்து தற்போது வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து 5வது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. கடத்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சி செப்டம்பர் மாதத்தில் தாமதமாக தொடங்கப்பட்டது.

செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்திருப்பதால் பல பண்டிகைகளை போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முந்தைய வருடங்களில் ஜூலை மாதம் ஆரம்பித்து முடிந்து விடும். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 - 11 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30 - 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5ல் நமீதா மாரிமுத்து, இசைவாணி, ராஜு, மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, அபிஷேக், ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நாடியா, நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் திருநங்கை நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினர்.

இந்த சீசன் ஆரம்பத்தில் சற்று போரிங்காக சென்ற நிலையில், தற்போது கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் பாவ்னி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் உள்ளனர். இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் நாளை வெளியேற்றப்படுவார். இந்த வாரம் சின்ன பொண்ணு அல்லது அபினய் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

also read : இன்ஸ்டா ரீலில் தனது பாய் ஃபிரெண்டை அறிமுகப்படுத்திய பிரபல சீரியல் நடிகை..
 ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரம் முழுவதும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் எண்ணற்ற பிரச்சனைகள் இருப்பதால் கமலஹாசன் எதுகுறித்து பேசப்போரோகிறார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.


இதனிடையே தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோட் தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களுக்கிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பல்வேறு ஜாலியான டாஸ்க்குகளும் கொடுப்பார்கள் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: