Home /News /entertainment /

பிக்பாஸ் நண்பர்களுடன் பீஸ்ட் FDFS சென்ற ப்ரியங்கா- யூடியூப் வீடியோ வைரல்

பிக்பாஸ் நண்பர்களுடன் பீஸ்ட் FDFS சென்ற ப்ரியங்கா- யூடியூப் வீடியோ வைரல்

பிக்பாஸ் ப்ரியங்கா

பிக்பாஸ் ப்ரியங்கா

VJ Priyanka Deshpande | பீஸ்ட் திரைப்படத்திற்கு நண்பர்களுடன் சென்ற விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்கா..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான விஜே-வாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. முன்னணி சேனலாக இருக்கும் ஸ்டார் விஜய் டிவி-யின் பல சூப்பர் ஹிட் ஷோக்களை பிரமாதமாக தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

ஷோக்களின் போது இவரை சக தொகுப்பாளர்கள் அல்லது பங்கேற்பாளர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் கூட அதை சீரியசாக எடுத்து கொள்ளாமல், நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதில் வல்லவர் பிரியங்கா. சூப்பர் சிங்கர் உட்பட விஜய் டிவி-யின் பல சூப்பர் ஹிட் ஷோக்களை திறம்பட தொகுத்து வழங்கி வரும் பிரியாங்கா தேஷ்பாண்டே இன்ஸ்டா, யூடியூப் போன்ற சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை, தொலைதூர மற்றும் வேடிக்கையான பயணங்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழும் ஜாலி நிகழ்வுகள் உள்ளிட்ட பல  வீடியோக்கள் மற்றும் Vlogs-ஸ் போட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ போனது பற்றிய vlog ஒன்றை பிரியங்கா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் அப்லோட் செய்து உள்ளார்.



also read : உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் த்ரிஷாவின் அடுத்த படம்…

தீவிர விஜய் ரசிகரான பிரியங்கா தேஷ்பாண்டே நள்ளிரவு 1 மணிக்கு BEAST FDFS-ற்கான vlog-ஐ எடுத்து உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது: நான் பீஸ்ட் படத்திற்கு செல்ல பிளான் போட்டதும் கூடவே நண்பர்கள் சிலரும் வருவதாக கூறினர். 13-ஆம் தேதி ரிலீஸ் எனினும் 12-ஆம் தேதி மிட்நைட் வரை ஷூட் இருக்கிறதே என்று யோசித்தேன். அதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அருகில் உள்ள தியேட்டருக்கு சென்று பீஸ்ட் பார்க்க பிளான் செய்தேன். நீண்ட மாதங்கள் கழித்து தற்போது பீஸ்ட் படத்திற்கு தியேட்டருக்கு சென்று பார்க்க உள்ளேன் என்று கூறினார் பிரியங்கா.



பின் 1 மணி நேர குட்டி தூக்கத்திற்கு பிறகு, பீஸ்ட் மார்னிங் என்றபடி தியேட்டருக்கு செல்கிறார் பிரியங்கா. தியேட்டரில் விஜே அபிஷேக் உள்ளிட்ட நண்பர்கள் காத்திருக்க அவர்களுடன் இணைகிறார் பிரியங்கா. பின்னர் நண்பர்களுடன் ஜாலியாக கலாய்த்து கொண்டே பாப்கார்ன் வாங்குகிறார். தனது வாழ்விலேயே அதிகாலை 4 மணிக்கு படம் பார்த்தது கிடையாது இது தான் முதல்முறை என்கிறார். பின் படம் துவங்கியவுடன் ரசிகர்களோடு ரசிகராக கூச்சலிடுகிறார். இன்டெர்வெலின் போது பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜுவை காட்டி லேட்டாக வந்ததாக கூறுகிறார். படம் முடிந்த பின் இறுதியாக நண்பர்களுடன் சேர்ந்து பீஸ்ட் அரபி குத்து மியூசிக்கிற்கு லேசான ஆட்டம் போடுகிறார்.

also read : ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!


பிறகு காரில் சென்று கொண்டே பீஸ்ட் படம் சூப்பராக இருந்ததாகவும், ஒரு மாஸான லுக்கில் நடிகர் விஜயை பார்த்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும் கூறி உள்ளார். தொடர்ந்து ஒரு விளம்பர ஷூட்டிங்கில் தானும், மிர்ச்சி செந்திலும் இடம்பெறுவதை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து காட்டி, தான் அடுத்தடுத்த டேக் வாங்குவதையும் காட்டி வீடியோவை முடித்துள்ளார் பிரியங்கா.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Anchor Priyanka, Vijay tv

அடுத்த செய்தி