ஸ்டார் விஜய்யின் இன்றைய் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2 ஆவது மற்றும் 3 ஆவது புரமோக்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை வாரம் முழுவதும் பார்க்காதவர்கள் கூட வார இறுதியில் ஒளிப்பரப்பாகும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை எபிசோடை தவறாமல் பார்த்து விடுவார்கள். கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ் உடன் உரையாடுவார். வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை வைத்து பஞ்சாயத்தை கூட்டி விசாரிப்பார். ஆனால் இந்த வாரம் அவரின் உடல் நலம் கைக்கொடுக்காத காரணத்தினால் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய எபிசோடை சுவாரசியம் குறையாமல் எடுத்து சென்றார். அதே போல் ஹவுஸ்மேட்ஸூக்கு செல்ல பெயரும் வைத்தார். அதில் தாமரைக்கு வைக்கப்பட்ட பெயர் தான் கன்னி வெடி.
இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ ஏற்கெனவே வெளியான நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இரண்டாவது புரமோவில் ஸ்கூல் டாஸ்க் பற்றிய கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. இதில் திருக்குறள் டாஸ்கை ஆசிரியர்களாக நடித்த அபிஷேக், ராஜூ, அமீர் மற்றும் வார்டனாக இருந்த சிபிக்கு ரம்யா கிருஷ்ணன் கொடுக்கிறார். வழக்கம் போல் அபிஷேக் அப்பிட்டாக, ராஜூ மண்டியிட, சிபியும் வாய் உளற மொத்தத்தில் நான்கு பேரும் ஜீரோ மார்க் வாங்குகின்றனர். இவர்களுக்கு அக்ஷரா பனிஷ்மெண்ட் வழங்க போகிறார். இதை ரம்யா கிருஷ்ணனும் வழி மொழிகிறார். இந்த புரமோவை பார்த்த சிபி வெறியர்கள், ரம்யா கிருஷ்ணன் சிபியை டார்கெட் செய்வதாக கதற தொடங்கிவிட்டனார். முழு எபிசோடை பார்த்தால் தான் உண்மை தெரியும்.
அடுத்த புரமோவில் பிரியங்காவை தூக்கி சாப்பிடுகிறார் தாமரை. இந்த சீசனில் பிரியங்காவின் பெயர் டேமேஜ் ஆனால் அதற்கு முழு காரணம் தாமரை தான். பிரியங்கா பாலை ஊற்றி பாம்பை வளர்ப்பது போல பக்கத்திலே வைத்து தாமரையை வளர்கிறார். கேப்டன் டாஸ்கில் நடந்ததை பற்றி ரம்யா கிருஷ்னன் பேச, உடனே சண்டை கோழி தாமரை சவுண்டு விட தொடங்கினார். தகுதி பற்றி பிரியங்கா பேசியதை மீண்டும் தாமரை கொளுத்தி போட அதற்கு பிரியங்கா பதில் சொல்வதற்குள் தாமரை அடுத்தடுத்து பேச தொடங்கிவிடுகிறார்.
ஒரு ஆங்கர் பிரியங்காவுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் தாமரையிடம் வாய்யை கொடுக்க முடியுமா என்ன? இதில் ரசிகர்களின் கைத்தட்டலும் தாமரைக்கே ஒலிக்கிறது. இதற்கு காரணம் தாமரை மீது இருக்கும் அன்பு இல்லை. பிரியங்கா கேம் விளையாடமால் இருக்கும் கடுப்பு தான். தாமரை பற்றி கமல்ஹாசன் ஹிண்ட் கொடுத்தும் அதை புரியாமலே கேம் விளையாடுபவர் பிரியங்கா தான்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5, Vijay tv