Home /News /entertainment /

பிக்பாஸ் பிரியங்கா - தாமரை செய்த விதி மீறல்.. வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!

பிக்பாஸ் பிரியங்கா - தாமரை செய்த விதி மீறல்.. வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

bigg boss tamil session 5 |பிக்பாஸ் 5ல் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் பிரியங்காவும் தாமரையும் சண்டை போட்டு கொண்டது பற்றி கமல்ஹாசன் இன்று சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் 5ல் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் பிரியங்காவும் தாமரையும் சண்டை போட்டு கொண்டது பற்றி கமல்ஹாசன் இன்று சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்.

    பிக் பாஸ் சீசன் 5 தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 89 நாட்கள் நிறைவடைந்து விட்டது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் நடைப்பெற்று முடிந்தது. மற்ற 4 சீசன்களில் மிக மிக விறுவிறுப்பாக நடந்த இந்த டாஸ்க், சீசன் 5 ல் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. டாஸ்க் தொடங்கிய முதல் நாளிலிருந்து இணையத்தில் இதுதொடர்பாக காரசாரமான விவாதங்கள் தொடர்ந்தன. 5 சுற்றுகளாக நடந்து முடிந்த இந்த டாஸ்கில் கடைசியில் அமீர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்று விட்டார்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் : பாவ்னி, அபிநய் ‌‌‌மற்றும் அமீர் விஷயத்தில் மீண்டும் எல்லை மீறும் கேள்விகள்!

    இந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில், வைக்கப்பட்ட முட்டை டாஸ்கில் பிரியங்காவும் தாமரையும் சரமாரியாக சண்டை போட்டு கொண்டனர். வாய் சண்டை தொடங்கி கை சண்டை வரை போனது. தாமரையை பார்த்து பிரியங்கா காரி துப்ப, கோபத்தில் தாமரை, பிரியங்காவை அடித்து விட மொத்த ஹவுஸ்மேட்ஸூக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சன் டிவி சீரியல்!

    இதுத்தொடர்பாக யார் மீது குற்றம்? என பல விவாதங்கள் இணயத்தில் நடந்தன. பிக் பாஸ் ரசிகர்களும் இதுகுறித்து இணையத்தில் அதிகம் பேசினர். வார இறுதியில் கமலஹாசன் இதுகுறித்து கண்டிப்பாக விசாரிப்பார் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். 4 நாட்களாக சண்டை போட்டு பேசாமல் இருந்த தாமரையும் பிரியங்காவும் நேற்று ஒன்று சேர்ந்தனர். இதை ராஜூ ஏற்கெனவே சரியாக கணித்து இருந்தார். கமல்ஹாசன் எபிசோடுக்கு முன்பு இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று.



    இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து கமல் இருவரையும் கேள்வி கேட்கிறார். இதை உறுதி செய்யும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இருவரும் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்கின்றனர். ஆனாலும் கமல்ஹாசன் இருவரையும் சரமாரியாக கேள்வி கேட்கிறார். டாஸ்கில் இருவரும் விதிமீறல் செய்திருப்பதாவும் கமல் குறிப்பிடுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி