ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸில் அடித்து கொள்ளும் பிரியங்கா - தாமரை.. கண்கலங்கி அழும் பாவ்னி!

பிக் பாஸில் அடித்து கொள்ளும் பிரியங்கா - தாமரை.. கண்கலங்கி அழும் பாவ்னி!

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் (bigg boss) இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்க்ளுக்கு முட்டை டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் சீசன் 5ல் இன்றைய முதல் புரமோவில் பிரியங்காவும் தாமரையும் சரமாரியாக அடித்து கொள்கிறார்கள். ஒருபக்கம் பாவ்னி கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். ‘டிக்கெட் டூ ஃபினாலி’ ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இதே பிரச்சனை தான் அரங்கேறி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 85 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்னும் 2 வாரங்கள் மட்டுமே மிச்சமுள்ளது. நேற்றைய தினம் டிக்கெட் டூ ஃபினாலி ரவுண்ட் தொடங்கியது.முதல் நாளே ஆட்டம் சூடு பிடிக்க வழக்கம் போல் நிரூப் மற்றும் பிரியங்காவுக்கு முட்டிகிட்சு. அடுத்தது, தாமரைக்கும் சஞ்சீவுக்கும் வாய் தகராறு நீண்டது.போட்டியாளர்கள் பலத்த போட்டி முனைப்புடன் ஆடி வருகின்றனர். நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை யார் பெற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது.

இதையும் படிங்க.. YearEnder 2021 : குஷ்பு முதல் ஸ்மிருதி இரானி வரை 2021ல் உடல் எடையை குறைத்த அரசியல் பிரபலங்கள்!

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு முட்டை டாஸ்க் கொடுக்கப்படுகிறது. தலா ஒரு போட்டியாளர்களுக்கு 10 முட்டை வீதம், யார் கடைசி வரை முட்டையை உடைக்காமல் பாதுகாக்கிறார்களோ அவர்கள் தான் இந்த போட்டியின் வின்னர்.

இதையும் படிங்க.. பிக் பாஸ் தாமரை உண்மையில் எப்படிப்பட்டவர்? அவரின் கணவர் கூறும் உண்மைகள்!

இந்த டாஸ்கில் பிரியங்காவும் தாமரையும் சரமாரியாக அடித்து கொள்கிறார்கள். பாவ்னியின் முட்டையை ராஜூ அடித்து கீழே தள்ளுகிறார். அதே போல் சஞ்சீவும் பாவ்னியின் முட்டையை உடைக்கிறார். இந்த பக்கம் அமீர், தாமரையின் முட்டையை கையாலே உடைத்து நொறுக்குகிறார். பாவனி 2 முட்டைகளை பிரியங்காவுக்கு வழங்கி விட்டு போட்டியில் இருந்து வெளியேறுகிறார். அதுமட்டுமில்லை இந்த புரமோவின் முடிவில் பாவனி பயங்கரமாக தேம்பி தேம்பி அழுகிறார். அவரை நிரூப் சமாதானம் செய்கிறார்.

' isDesktop="true" id="650559" youtubeid="rEpijbiC8F4" category="television">

இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய முதல் புரமோவில் இடம்பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்த முட்டை டாஸ்க் சுவாரசியமாகவும், அடி தடி சண்டையுட்ன் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv