Home /News /entertainment /

பிக் பாஸ்: பிரியங்கா தேம்பி தேம்பி அழும் அளவுக்கு அப்படி என்ன நட்புக்கு இலக்கணமாக இருந்துவிட்டார் நிரூப்?

பிக் பாஸ்: பிரியங்கா தேம்பி தேம்பி அழும் அளவுக்கு அப்படி என்ன நட்புக்கு இலக்கணமாக இருந்துவிட்டார் நிரூப்?

பிக் பாஸ் பிரியங்கா நிரூப்

பிக் பாஸ் பிரியங்கா நிரூப்

பிக் பாஸில் பிரியங்கா பற்றி மற்ற போட்டியாளர்களிடம் தவறாக பேசியதும் நிரூப் தான். ஆனால் பிரியங்கா நிரூப் தான் நட்பின் இலக்கணம் போல் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மனதில் இந்த கேள்வி எழாமல் இல்லை.. பிரியங்கா விடாமல் 5 நிமிடம் தேம்பி தேம்பி அழுது நிரூப் பெயரை நாமினேஷன் செய்தார். நட்பு.. அன்பு.. ஃபிரண்ட்ஷிப் என பல பெயர்களை வைத்தார். உண்மையில் நிரூப் அப்படி என்ன நட்பின் இலக்கணமா இருந்து விட்டார்? குறிப்பாக அபிஷேக், பிரியங்கா விஷயத்தில் நிரூப்பின் மூவ் அனைத்தும் அப்படியே எதிர்மறையாக தான் இருந்தது. நிரூப்புக்கு அந்த அளவுக்கு சீனே இல்லை என்று சொன்ன பிரியங்கா தேம்பி, தேம்பி அழுதது ஏன்?

  65 ஆவது நாள் சஞ்சீவ்வும் - ராஜூவும் ஞாயிற்றுகிழமை எபிசோடில் ஆடியன்ஸ் மனநிலை என்ன இப்படி இருக்கிறது? என குழம்பி கொண்டிருந்தனர். குழப்பத்தில் இருந்த ராஜூ மைண்டை உடனே டியூன் செய்தார் சஞ்சீவ் நல்ல விஷயம். இதற்கு போய் நிரூப், சஞ்சீவ்க்கு ஜால்ரா பட்டம் கொடுக்கிறார். சஞ்சீவ் மீது நிரூப்பின் டார்கெட் டே எண்டு வரை நீடிக்கிறது. இந்த பக்கம் பிரியங்கா ஜீலியை நினைத்து (அபிஷேக் பெயர் கூட மறந்து போச்சி ஜீலி தான் வருது) தனியாக படுத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.

  பிக் பாஸ் வீட்டுக்கு 106 நாட்கள் காண்டிராக் போட்டு வீட்டு வேலைக்கு வந்தது போலவே தாமரை ஒட்டுமொத்த வேலையையும் செய்து கொண்டிருந்தார். மற்ற அனைவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த தாமரை மட்டும் ஓவர் சின்சியரா, பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார். இதை தான் பிரியங்கா சுட்டி காட்டினார். ஆனால் அதை கமலும் கேட்காது சின்ன வருத்தம் தான்.

  இதுப்போல வேலைகளை செய்து கொடுப்பதால் தான் தாமரை வீட்டை விட்டு போனால் சாப்பாட்டுக்கு கஷ்டம், பாத்திரம் கழு ஆள் இல்லை என நினைத்து ஹவுஸ்மேட்ஸ் தாமரை பெயரை எவிக்‌ஷனுக்கு கொண்டு வருவதில்லை என்ற பேச்சும் இருக்கிறது. சஞ்சீவ் இதை மறுபடியும் சுட்டிக்காட்ட பேருக்கு போய் வீட்டின் தலைவரான நிரூப், தட்டி கேட்க, தாமரை அவரையும் தூசி தட்டிவிட்டார்.

  அடுத்த சில மணி நேரங்களில் தலைவர் டாஸ்க் தொடங்கியது. மியூசிக் சேரை டாஸ்க்காக கொடுத்தார் பிக் பாஸ். சின்ன சுவாரசியத்துக்காக வெளியேறிவர் பேச்சு திறமையால் மற்றவரிடம் வாய்ப்பு கேட்கலாம் என்றார். முதல் ஆளாக அவுட் ஆனார் தாமரை. அடுத்தது பிரியங்கா அவுட் ஆக, அவருக்கு நிரூப் வாய்ப்பு கொடுத்தார். இந்த இடத்தில் நிருப் பிரியங்காவிடம் பேச முயற்சித்தது பச்சையாக தெரிந்தது.

  அடுத்தது, சஞ்சீவ் அவுட் ஆக, ராஜு வாய்ப்பு தந்தார். ஒரு கட்டத்தில் அமீர் அவுட் ஆக, அவருக்கு சஞ்சீவ் வாய்ப்பு கொடுத்தார். இதில் அவரின் நோக்கம் என்ன என்பதையும் கேமிராவில் சஞ்சீவ் பதிவு செய்தது சூப்பர். அக்‌ஷராவுக்கு சிபி ஒரு வாய்ப்பு கொடுத்தார். பார்க்கவே கண் கொள்ளா காட்சி. படையப்பாவும் நீலாம்பரியும் அன்பை பொழிந்தனர். ஆனால் அக்‌ஷரா வழக்கம் போல் சிபியின் பெயரை எவிக்‌ஷனில் குத்தினார். மீண்டும் அக்‌ஷராவுக்கு வருண் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் டாஸ்கில் இறுதியாக ஜெயித்தது டான்ஸர் அமீர்.

  சஞ்சீவ் கணிப்பு பொய்யாக, அமீரா இருந்த என்னகென்ன என்பது போலவே பாவனி காயினை பயன்படுத்தி இந்த வார தலைவரானார். அவருக்கு பெண்களுக்கான உதவியாளர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. உப்பு சப்பு இல்லாமல் இதை வைத்து பாவனியும் அக்‌ஷராவும் முட்டி கொண்டனர். அடுத்தது இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன். வழக்கம் போல் போட்டியாளர்கள் இதுவரை நாமினேஷன் செய்தவர்கள் பெயரையே கூறினர். சின்ன மாற்றமாக பிரியங்கா, நிரூப் பெயரை கூறினார். அதை அவர் சொல்வதற்கு 8 நிமிடம் எடுத்து கொண்டார். அதில் 5 நிமிடம் அழுவதற்கு மட்டுமே எடுத்துக் கொண்டார். நிரூப் என் நண்பன், அவனை நான் யூஸ் செய்தேன் என்றான். அப்படி இப்படி நிரூப்பை மிஸ் செய்வது போலவே பிரியங்கா பேசினார்.

  ஆனால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே நிரூப், பிரியங்கா - அபிஷேக் நட்பை பெரிதாக விரும்பவில்லை என்பது நன்கு தெரிந்தது. அபிஷேக்கின் வெளியேற்றம் நிரூப்புக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்த நிலையில், அவரின் ரீ எண்ட்ரி நிரூப்பை டவுன் ஆக்கியது. இதை அவரே வாக்குமூலமாக தந்தார்.

  பிக் பாஸ் கேபிக்கு கிடைத்த கதாநாயகி வாய்ப்பு!

  பிரியங்கா பற்றி மற்ற போட்டியாளர்களிடம் தவறாக பேசியதும் நிரூப் தான். ஆனால் பிரியங்கா நிரூப் தான் நட்பின் இலக்கணம் போல் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். ஆனால் அந்த அளவுக்கு சீன் இல்லை என்பது தான் ஆடியன்ஸீன் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிற்து. இந்த வார எவிக்‌ஷன் பட்டியலுக்கு அமீர், தாமரை, நிரூப், அண்ணாச்சி, அக்‌ஷரா, சிபி மற்றும் அபிநய் பெயர்கள் வந்தது. இதில் பிரியங்கா பெயர் வரவில்லை என்பதில் தாமரைக்கு அப்படியொரு கடுப்பு. அதை அக்‌ஷரா, வருணிடம் வெளிப்படுத்தியது நெருடலாக இருந்தது.  மீண்டும் காயின் ஆற்றலை பயன்படுத்த நிரூப் விரும்பினார். எப்படியாவது இந்த வார எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்க நினைத்து, சஞ்சீவை எவிக்‌ஷன் லிஸ்டில் சேர்க்க விரும்பினார். ஆனால் அதற்கும் ஒரு ’க்’ வைத்தார் பிக் பாஸ், சஞ்சீவ்வும், நிரூப்புக்கும் இடையில் டாஸ்க் வைக்கப்பட்டது. அதிலும் நிரூப் தோற்க, கடைசியில் நாமினேஷன் லிஸ்டில் வந்தார் நிரூப். சொல்ல முடியாது இந்த வாரம் நிரூப் வெளியேறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி