Home /News /entertainment /

என்ன புண்ணியம் பண்ணினேன்னு தெரில... விஜய் டிவி பிரியங்கா நெகிழ்ச்சி வீடியோ!

என்ன புண்ணியம் பண்ணினேன்னு தெரில... விஜய் டிவி பிரியங்கா நெகிழ்ச்சி வீடியோ!

பிரியங்கா

பிரியங்கா

மொத்தமாக பிரியங்கா என்றால் இப்படித்தான் என்பதை வெளியில் காட்ட வேண்டும் என நினைத்து தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த பிரியங்கா, தனது யூ-ட்யூப் சேனல் லைவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பலரின் எச்சரிக்கையை தாண்டியும் எதற்காக பிக் பாஸ் சென்றார் என்பதன் காரணத்தையும் அவர் தெரிவித்தார்.

    நடந்து முடிந்த பிக் பாஸ் 5-ம் சீசனில் சுமார் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் வெளியேறிய நிலையில், இறுதி சுற்றுக்கு 5 பேர் மட்டுமே மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் போலவே இந்த முறையும் போட்டியாளர்களுக்குள் கடும் போட்டி நிலவி வந்தது.

    கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் இறுதியாக ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் மீதமிருந்தனர். இவர்களுக்குள் பல முனை போட்டிகள் நடந்து வந்தது. யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்தபோது, மக்களுக்கு அதிகம் பிடித்த ராஜு வெற்றி பெற்று கோப்பையை வாங்கினார். இவருக்கு அடுத்ததாக பிரியங்கா இரண்டாவது இடம் பிடித்தார்.

    வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!

    இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பிரியங்கா, தனது யூ-ட்யூப் சேனல் லைவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் பேசிய அவர், இந்த நிகழ்ச்சிக்குப் போனதே ஒரு சவாலான விஷயம் தான். போவதற்கு முன்பு பலரும் வேண்டாம் என்றார்கள். இருந்தாலும் நான் இதில் கலந்து கொள்ள வேண்டும், பிரியங்கா எப்படி என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.



    உங்கள் கண்கள் செமயா இருக்கு... பிக் பாஸ் ராஜுவை பாராட்டிய விஜய்!

    அந்த ஆசை தற்போது நிறைவேறி உள்ளது. இப்போது கிடைத்திருக்கும் வெற்றி உங்களால் கிடைத்தது. என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை சந்தித்து இருக்கிறேன். அதை எப்படியாவது கடந்து போக வேண்டும் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருப்பேன். நான் நேசிக்கும் வேலை மட்டும் தான், என்னை சந்தோஷப்படுத்தியது. எந்த ஒரு கஷ்டத்தையும் என் மூளைக்குள் செல்லாமல் பார்த்துக்கொண்டது என்னுடைய வேலை. டிவி-யில் தொகுப்பாளினியாக எனக்கு நிறைய அன்பை கொடுத்தீர்கள். லாக்டவுன் டைமில் யூ-ட்யூப் ஆரம்பித்து எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன். அதற்கும் உங்களிடம் நிறைய அன்பு கிடைத்தது. சரி மொத்தமாக பிரியங்கா என்றால் இப்படித்தான் என்பதை வெளியில் காட்ட வேண்டும் என நினைத்து தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன். அதற்கும் நிறைய நிறைய அன்பை கொடுத்தீர்கள். இதற்கு இந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் பண்ணினேன் எனத் தெரியவில்லை. விரைவில் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரையும் சந்தித்து ஜாலி பண்ணுவேன், என்று தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, TV actress, TV show

    அடுத்த செய்தி