Home /News /entertainment /

பிக்பாஸ் : பிரியங்கா தாமரையை பார்த்து அந்த வார்த்தை சொல்லி திட்டுனாறாமே.. உண்மையா?

பிக்பாஸ் : பிரியங்கா தாமரையை பார்த்து அந்த வார்த்தை சொல்லி திட்டுனாறாமே.. உண்மையா?

 bigg boss: உண்மையில் பிரியங்கா இந்த வரியை சொன்னாரா? இல்லையா? என்பது ஃபுட்டேஜில் காட்டப்படவில்லை

bigg boss: உண்மையில் பிரியங்கா இந்த வரியை சொன்னாரா? இல்லையா? என்பது ஃபுட்டேஜில் காட்டப்படவில்லை

bigg boss: உண்மையில் பிரியங்கா இந்த வரியை சொன்னாரா? இல்லையா? என்பது ஃபுட்டேஜில் காட்டப்படவில்லை

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  சும்மாவா பெயர் வச்சாங்க ரம்யா கிருஷ்ணன், கன்னி வெடி தாமரைன்னு பிக் பாஸ் வீட்டில் தாமரையின் வாயில் சிக்குபவர்கள் அன்றைய புரமோவில் இடம்பெறுவது உறுதி. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை போதாதுன்னு இதில் அரசியல் சண்டை வேற. அது எப்படி என்னை பார்த்து அப்படி சொல்லலாம்? என்கிறார் தாமரை. இதையே காரணமாக சொல்லி நேற்று நாமினேஷனிலும் பிரியங்கா பெயரை சொல்லி விட்டார் தாமரை அப்படி என்ன வார்த்தை அது? வாங்க தேடுவோம்.

  பிக் பாஸ் வீட்டில் நேற்று 57 ஆவது நாள். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மாரி பாடலுடன் கண் விழித்தனர். டான்ஸ் மாஸ்டர் அமீர் உதவியுடன் ஓரளவுக்கு ஹவுஸ்மேட்ஸ் நடனம் ஆடினார்கள். ஐக்கி பெர்ரி டான்ஸை மிஸ் செய்வதாக பிரியங்கா கூவினார். (ஐக்கி பெர்ரி போனது யாருக்கு சந்தோஷமோ இல்லையோ பிரியங்கா ஹாப்பி அண்ணாச்சி. பீட்சா கதையெல்லாம் நாங்க மறக்கல பிரியங்கா). அடுத்தது இந்த வார தலைவருக்கான டாஸ்க். அண்ணாச்சி, அபிஷேக், சிபி ஆகியோர் கலந்து கொண்டனர். கார்டன் ஏரியாவில் டாஸ்க் தொடங்கியது. அண்ணாச்சி டாஸ்கில் வெற்றி பெற்றார். கேம் சேன்ஞர் நீருப், காயின் ஆற்றலை பயன்படுத்தி இந்த வார தலைவரானர்.

  அங்கையே நிரூப் மீது காண்டானார் அண்ணாச்சி. அதன் பிரதிபலிப்பு லிவிங் ஏரியாவிலும் தெரிந்தது. காயின் ஆற்றலை பயன்படுத்திய நிரூப்புக்கு, இந்த வார டாஸ்க்காக , எதிரில் பேசுபவர் எந்த உயரத்தில் உள்ளாரோ அவரின் உயரத்திற்கு குனிந்து , அவரின் கண்ணை பார்த்து பேச வேண்டும். இதற்கு ஒப்பு கொண்டு தான் நிரூப் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார் (சாரி சரி பறித்து கொண்டார்). வழக்கம் போல் தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி நிரூப் புது ரூல்ஸ்களை போட, அண்ணாச்சி ’பிரேக் த ரூல்ஸ்’ பாட தொடங்கினார். நிரூப் எது சொன்னாலும் செய்ய முடியாது செய்ய முடியாதுன்னு வாய் நீட்டினார்.

  ஆற்றல் சக்தியை பிரியங்கா, அபிஷேக்கிடம் கொடுப்போம், அவர்கள் பாத்ரூமில், பெட்ரூமில் ஆளுமை செய்வார்கள் என நிரூப் சொன்னதும் எரிமலையாய் வெடித்தார் அண்ணாச்சி. அபிஷேக்கும், பிரியங்காவும் அதை மிஸ் யூஸ் செய்வார்கள் என்றார். உடனே பொங்கி எழுந்த பிரியங்கா, உங்களை மாதிரி வேலை செய்யாமல் ஓப்பி அடிக்க மாட்டோம் என்றார். இப்படியே பிரியங்காவுக்கும் அண்ணாச்சிக்கும் வாய்கால் தகராறு நீண்டது.

  இதற்கு கண்டனங்கள் எழ, உத்தரவை வாபஸ் பெற்றார் நிரூப்.. இதுக்கு நடுவில் சம்மந்தமே இல்லாமல் வருண் டேபிள் மீது ஏறி கத்தினார். அதை அக்‌ஷரா மட்டுமே ரசித்தார். மற்றவர்கள் என்னென்னு கூட கண்டுக்கல. அண்ணாச்சிக்காக வழக்கம் போல் ராஜூ குரல் கொடுத்தார். இந்த அடிதடியின் முடிவில் அண்ணாச்சி கொடுத்த விளக்கம் அதிகாரம் செய்வது போல் பேசுவது பிடிக்கவில்லை. நீ ரூல்ஸ் போட்டால் அதை நாங்க ஃபாலோலாம் செய்ய மாட்டோம் என்றார். இதே பிரச்சனை தான் அண்ணாச்சிக்கு இசைவாணி கூடவும் நடந்தது. இசைவாணியை சர்வதிகாரி என சொல்லி வெளியெ துரத்தினார்.

  போதாது குறைக்கு அக்‌ஷரா இதுதான் சாக்கு என்று, தன் பெயரை சரிசெய்ய இதேபோல தான் ஸ்கூல் டாஸ்கிலும் நடந்தது. நீங்கள் செய்தது சரி என்றால் நான் பொருட்களை தூக்கி அடிச்சதும் சரி தான் என்றார். (மத்த இடத்தில் வாயை நீட்டும் அண்ணாசி, அக்‌ஷராவிடம் வழிந்து கொண்டே சரிதான்..வேண்டும் என்றால் இன்னும் போட்டு உடை என்றார்) கடைசி வரை அக்‌ஷரா செய்தது தவறு என்பதை சுட்டிக் காட்ட யாருமே தயாரா இல்லை. (ரம்யா கிருஷணன் உட்பட)

  இந்த அக்கபோர் முடிய, இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் தொடங்கியது. முதல் வாரம் என்பதால் சஞ்சீவ், அமீருக்கு கருணை காட்டினார் பிக் பாஸ். நீருப்பும் இந்த வார தலைவர் என்பதால் அவரின் பெயரும் தப்பித்தது. இவர்கள் 3 பேரை தவிர மற்ற அனைவரும் சிபி, பிரியங்கா, தாமரை, அண்ணாச்சி, ராஜூ,. அபினய், வருண், அக்‌ஷரா, பாவனி, அபிஷேக் நாமினேஷன் லிஸ்டில் வந்தனர்.  இதில் தாமரை செல்வி பிரியங்கா பெயரை குறிப்பிடும் போது இந்த விஷயத்தை சொன்னார். “தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை.. வீட்டில் இருந்தாலும் பிரச்சனை’ என்று பிரியங்கா சொன்னதாக சொன்னார். இதே விஷயத்தை ஞாயிற்றுகிழமை அன்றும் வருண் மற்றும் அக்‌ஷராவிடம் தாமரை புலம்பி தள்ளினார்.அதற்கு அக்‌ஷரா, பிரியங்கா பேசுவது எல்லாமே தப்பும்ன்னு எனக்கு நிறைய டைம் தோணியிருக்கு எனவும் கொளுத்தி போட்டார்.

  ஆனால், உண்மையில் பிரியங்கா இந்த வரியை சொன்னாரா? இல்லையா? என்பது ஃபுட்டேஜில் காட்டப்படவில்லை. தாமரை இதை சொல்லும் போதே மியூட் போடப்பட்டது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி