பிக் பாஸ் பாவனி ரெட்டி தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் அந்நிகழ்ச்சி எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த 2 வருடங்களாக அக்டோபரில் தொடங்கியது.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் நடிகை பாவனி ரெட்டி. விஜய் டிவி-யின் சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அவர் பிக் பாஸ் சென்றது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா, ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்!
பிக் பாஸ் 5-ல் இறுதி வரை இருந்த அவர் நிகழ்ச்சியில் 3-ம் இடத்தைப் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்து சில தினங்களே ஆன நிலையில், தான்
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
Jai Bhim: ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம்!
’என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும்... நான் லேசான அறிகுறிகளுடன்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் நான் அனைத்து மருத்துவ நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்’ என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார் பாவனி.
இதையடுத்து அவர் விரைவில் மீண்டு வர வேண்டுமென வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.