ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

BIGG BOSS 5 : அமீரின் முத்தத்தால் பாவ்னிக்கு வந்த சிக்கல்.. சர்ச்சைக்கு முடிவு கட்ட நினைக்கும் ரசிகர்கள்!

BIGG BOSS 5 : அமீரின் முத்தத்தால் பாவ்னிக்கு வந்த சிக்கல்.. சர்ச்சைக்கு முடிவு கட்ட நினைக்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் அமீர் பாவனி

பிக் பாஸ் அமீர் பாவனி

அமீருக்கு உடனே ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 77 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும் வைல்டு கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் மற்றும் அமீர் வந்துள்ளனர்.

  இதில் பாவ்னி மீது அபிநய்-க்கு கூடுதல் பாசம் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் எனக்கு உன்னை பிடிக்கும் என அபிநய், பாவ்னிக்கு ஒரு பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து அபிநய் பாவ்னி மீது அக்கறை காட்டியது காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் மற்ற போட்டியாளர்களிடம் அது முக சுளிப்பை ஏற்படுத்தியது. இதனை கவனித்த பாவ்னி அவருக்கு அபிநய் செய்வது பிடிக்கவில்லை என்றாலும், நேரடியாக அவரிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் சக போட்டியாளர்களிடம் இதுகுறித்து பேசி வந்தார்.

  நாமினேஷனில் ஓங்கி ஒலிக்கும் பெயர்... டார்கெட் செய்யப்படுகிறாரா பிரியங்கா?

  இந்த பிரச்சனை தொடர்ந்த நிலையில் கமல் இதுகுறித்து பேசினார். அப்போது பாவ்னியின் தவறை சுட்டி காட்டும் வகையில் குறும்படமும் போடப்பட்டது. இதனை தொடந்து ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வெளியேறினார் அபிநய். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர், வந்த நாள் முதல் பாவ்னியுடன் நெருங்கி பழகி வந்தார்.

  விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம்... முன்னணி சேனலில் ஹீரோவாகும் ‘ஈரமான ரோஜாவே’ ஷ்யாம்!

  பாவ்னி மிகவும் அழகாக இருக்கிறார் என அடிக்கடி சொல்வதும், அவருடன் அடித்து விளையாடுவது என அமீர் இருந்தார். இதனை பார்த்த இமான், ஒருமுறை அமீரை அழைத்து எச்சரித்துள்ளார். ஆனால் அமீர் திருந்துவதாக இல்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரியங்காவிடம் பாவ்னியை காதலிப்பதாக சொல்லிவிட்டேன் என அமீர் கூறினார். இதுகுறித்து ப்ரியங்கா, பாவ்னியை அழைத்து பேசிய நிலையில் எனக்கு வெட்கமாக வருகிறது என பாவ்னி சிரித்து கொண்டே கூறினார். ஆனால் அவரது காதலை ஏற்று கொள்ளாமல், தம்பி என அழைத்து வருகிறார்.

  ' isDesktop="true" id="644783" youtubeid="xzMdU9Lxu7M" category="television">

  அதையும் பாவ்னி வெட்கத்துடன் பதில் சொல்ல, பாவ்னி காதில் அமீர் எதோ சொல்ல முயற்சிக்கும் நேரத்தில் அவருக்கு முத்தம் கொடுப்பது போல காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதனால் அமீருக்கு உடனே ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.இதனை சற்றும் எதிர்பாராத பாவ்னி, அமீர் செய்ததைக் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி நீ செய்தது தனக்குப் பிடிக்கவில்லை என்றார். இந்தநிலையில் அமீர் பாவனியை முத்தமிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமீரின் செய்தது தவறு என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv