Home /News /entertainment /

பிக் பாஸ் பாவனிக்கு தாலி கட்டி குங்குமம் வைத்த அமீர்... வைரலாகும் வீடியோ!

பிக் பாஸ் பாவனிக்கு தாலி கட்டி குங்குமம் வைத்த அமீர்... வைரலாகும் வீடியோ!

பாவனி - அமீர்

பாவனி - அமீர்

பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்ட அமீர், பாவனியை காதலிப்பதாகச் சொன்னார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் பிரபலங்கள் அமீர் - பாவனி இருவரும் செய்துக் கொண்டதைப் போன்ற வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

    பொதுவாக விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்துக் கொள்ளும் போது, அதை தங்கள் சேனலில் சிறப்பு நிகழ்ச்சியாக்கி ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் சேனல் நிர்வாகத்தினர். அப்படித்தான் அமீர் - பாவனி திருமண வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளதா? என்றால், இல்லை என்பது தான் அதற்கான பதில். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ தான் அது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சி இளைஞர்களின் விருப்ப லிஸ்டில் ஒன்றாக உள்ளது. சண்டைகள், சச்சரவுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுவார்கள்.



    1000 நாட்களைக் கடந்த தஞ்சை தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்!

    கடந்த பிக் பாஸ் 5 சீசனில் அதிகம் பேசப்பட்டது அமீர் - பாவனி ஜோடி தான். அதில் கிடைத்த ரீச்சை வைத்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இருவரையும் ஜோடியாக களம் இறக்கியது விஜய் டிவி. இருவரும் நடனத்தில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இருவருவரின் நெருக்கமும் அதிகமாகி வருகிறது.



    சக நடிகரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பாவனி வெகுவிரைவிலேயே அவரை இழந்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு வேறொரு நடிகருடன் காதலில் விழுந்தார். பின்பு அதுவும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்ட அமீர், பாவனியை காதலிப்பதாகச் சொன்னார். ஆனால் அதை ஏற்காமல் இருந்த பாவனி, நல்ல மூகூர்த்த நாள் வந்தா கல்யாணம் தான் என சமீபத்தில் கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இந்த வார பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆஹா கல்யாணம் ரவுண்டு நடக்கிறது. அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் திருமணம் சம்பந்தப்பட்ட தீமில் நடனமாடுகிறார்கள். அப்போது பாவனி கழுத்தில் தாலி கட்டும் அமீர், அவரது நெற்றியில் குங்குமம் வைக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் உண்மையிலேயே இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் தான் அது பிக் பாஸ் ஜோடிகள் ப்ரோமோ எனத் தெரிய வந்தது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Vijay tv

    அடுத்த செய்தி