Home /News /entertainment /

பிக்பாஸ் OTT : 45 நாட்கள் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் லிஸ்ட்!

பிக்பாஸ் OTT : 45 நாட்கள் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் லிஸ்ட்!

பிக் பாஸ் OTT

பிக் பாஸ் OTT

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால், பிக்பாஸ் OTT-க்கான 24 மணிநேர நேரலை OTT தளத்தில் ஒளிபரப்ப தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிக்பாஸ் சீசன் 5 இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், இந்த பிரமாண்ட ரியாலிட்டி ஷோவை OTT ஃபார்மெட்டில் துவக்க பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். சின்னத்திரையில் சுமார் 100 நாட்கள் வரை நடைபெறும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை 13 போட்டியாளர்களுடன் 45 நாட்கள் என்ற வகையில் OTT-க்காக ஷோவை மறுவடிவமைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் டிவி-யில் பிக்பாஸை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் Bigg Boss OTT-யையும் தொகுத்து வழங்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக பிக்பாஸ் தமிழ் சீசன் 4 முடிந்த பிறகு பிக்பாஸ் மீதான பார்வையாளர்களின் ஆர்வத்தை தக்கவைக்க, ஷோ தயாரிப்பாளர்கள் பிக் பாஸ் ஜோடிகளை வைத்து ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்பினர். இதில் முந்தைய சீசன்களில் பிக்பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களும் பங்கேற்றனர். Bigg Boss Jodigal என்ற இந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோ தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் வரை ஒளிபரப்பப்பட்டது.

    இதையும் படிங்க.. ஆர்ஆர்ஆர் படம் தள்ளிப்போனதற்கு முதல்வரின் முடிவு காரணமா?

    பிக்பாஸ் தமிழ் சீசன் 5 முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால், பிக்பாஸ் OTT-க்கான 24 மணிநேர நேரலை OTT தளத்தில் ஒளிபரப்ப தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ‘மினி’ பிக்பாஸில் டைட்டில் வின்னர்களை தவிர இதுவரை நடந்த அனைத்து பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற சில போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழ் Bigg Boss OTT நேரடி ஒளிபரப்பு ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிவி சேனலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸை விட ஒடிடி பிக்பாஸை மேலும் சுவாரஸ்யமாக்க நிகழ்ச்சியில் சில புதுமையான மாற்றங்களை செய்ய , தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 24x7 லைவ் டெலிகாஸ்ட் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், எடிட் செய்யாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுமா என்பது பற்றிய விவரங்களை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

    இதையும் படிங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

    இதனிடையே பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக சில தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் OTT தமிழின் வரவிருக்கும் அறிமுக சீசனில் மரியா ஜூலியானா என்கிற ஜூலி, வனிதா விஜயகுமார் மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் பங்கேற்க உளளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. பிக்பாஸுக்கு வந்த பிறகு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட மூவருமே தமிழ் Bigg Boss OTT-ல் ஏறக்குறைய பங்கேற்ப்பது உறுதி என்று கூறப்படுகிறது. தவிர 24x7 லைவ் ஸ்ட்ரீமிங் ஓடிடி ஷோ, 12 அல்லது 13 போட்டியாளர்கள் 45 அல்லது 70 நாட்களுக்கு நடைபெறும் என்ற தகவல்கள் தமிழ் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, OTT Release, Vijay tv

    அடுத்த செய்தி