Home /News /entertainment /

எல்லோரையும் ஓட விடுறேன்.. பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக ஜூலி!

எல்லோரையும் ஓட விடுறேன்.. பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக ஜூலி!

பிக் பாஸ் ஜூலி

பிக் பாஸ் ஜூலி

”ஓட்டுனதும் போதும்.. ஒளிஞ்சதும் போதும்.. இனி எல்லாரையும் ஓட விடுறேன்.” என்ற பஞ்ச் டயலாக்குடன் ஜூலி என்ட்ரி தருகிறார்.

    டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார் பிக் பாஸ் புகழ் ஜூலி.

    பிக் பாஸ் சீசன் 5 முடிவதற்குள்ளே பிக் பாஸ் அல்டிமேட் குறித்த பேச்சுக்கள் இணையத்தில் கசிய தொடங்கின. இதையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் வெற்றிக்கரமாக கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்தது. ராஜூ டைட்டில் வின்னர் ஆனார். பிக் பாஸ் 5 குறித்த பேச்சுக்களே ஒருபக்கம் ஓயாதநிலையில் அடுத்தது பிக் பாஸ் அல்டிமேட் தொடங்கவுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். இதை உறுதி செய்யும் புரமோக்களும் இணையத்தில் வெளியாகின.

    இதையும் படிங்க.. டாக்டர் பாரதிக்கு தில்ல பார்த்தீங்களா? மறுபடியும் கண்ணம்மாவை தேடி போயிட்டாரு!

    இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையில் நேற்று முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முதல் போட்டியாளராக பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட பாடலாசிரியர் சினேகன் கலந்து கொள்ளவுள்ளார். அவரின் முதல் புரமோ நேற்று வெளியானது.

    இதையும் படிங்க.. செம்பருத்தி சீரியல் வில்லிக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

    இந்நிலையில் தற்போது 2 போட்டியாளர் யார்? என்ற தகவல் புரமோவுடன் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் புகழ் ஜூலி தான் அந்த 2 வது போட்டியாளர். சர்ச்சைக்கு பெயர் போன ஜூலி மீண்டும் களத்தில் இறங்குகிறார். அப்ப கண்டிப்பாக இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கன்டெண்டுக்கு பஞ்சம் இருக்காது. ஜூலியின் புரமோ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.



    வழக்கம் போல் கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ”ஓட்டுனதும் போதும்.. ஒளிஞ்சதும் போதும்.. இனி எல்லாரையும் ஓட விடுறேன்.” என்ற பஞ்ச் டயலாக்குடன் ஜூலி என்ட்ரி தருகிறார். அடுத்தடுத்த போட்டியாளர்கள் யார் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg boss Julie, Vijay tv

    அடுத்த செய்தி