• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss நிரூப் - பிரியங்கா பெஸ்டி டார்ச்சர்...கேமராவை பார்த்ததும் நடிக்க தொடங்கிய பிரியங்கா!

Bigg Boss நிரூப் - பிரியங்கா பெஸ்டி டார்ச்சர்...கேமராவை பார்த்ததும் நடிக்க தொடங்கிய பிரியங்கா!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss niroop bigg boss tamil 5 Day 13 review: நிரூப் பாத்ரூம்முக்கு போனதும் உடனே கேமரா முன்பு நடிக்க தொடங்கினார்.

 • Share this:
  பிக் பாஸ் 5 வீட்டில் பிரியங்கா -நிரூப்பின் பெஸ்டி டார்ச்சர் கடுப்பை அதிகரிக்க, உடனே ரசிகர்களுக்காக பிரியங்கா நடிக்க தொடங்கிவிடுகிறார்.

  பிக் பாஸ் வீட்டில் 13 ஆவது நாள் காலை கமலின் சிங்கார வேலன் இண்ட்ரோ பாடலுடன் தொடங்கியது. இதில் இமான் அண்ணாச்சி கமலாம், அக்‌ஷராவும் ஐக்கியும் 2 காளைகளாம். இவர்கள் இப்படி யோசிக்க, என்ன பாட்டு போட்ட என்னக்கென்ன என்பது போலவே உட்கார்ந்து கொண்டிருந்தார் ராஜூ. (இதெல்லாம் நோட் பண்ணுங்க பாஸ்). குளிக்க போக சொன்னது ஒருகுத்தம் போலவே பேசி கொண்டிருந்தனர் ஸ்ருதியும், பாவனியும். ஓவராக கிச்சன் ஏரியாவில் இருக்கும் பாவனிக்கு கையில் சிறு காயம் வேறு. இதற்கிடையில் பாய்ஸ் ரூமில் இருக்கும் நிரூப்பின் காதை கடிக்கிறார் பிரியங்கா. என்ன விஷயம் என்று புரியவில்லை. ஆனால் ராஜூ அபிஷேக் பற்றி தான் பேசுகிறார்கள் என்பது தெரிகிறது. பெயரை மைக்கில் சொல்லாமல் ரகசியமாக நிரூப் கையில் எழுதி காட்டுகிறார் பிரியங்கா. (அவ்வளவு பயம் அம்மனிக்கு) .

  17 போட்டியாளர்களுக்கு 2 பாத்ரூம் என்பது கொடுமையிலும் கொடுமை. ஒவ்வொருவராக குளித்து ரெடியாகி கொண்டிருந்தனர். பாவனி யாருக்கு பின்னாடி குளிக்க வேண்டும் என்ற குழப்பத்திலே சுற்றி கொண்டிருந்தார். இந்த பக்கம் ராஜூ பாய் தனது சினிமா அனுபவம் பற்றி இமான் அண்ணாச்சியிடம் பேசிக் கொண்டிருந்தார். பிரியங்கா கிச்சனில் பாத்திரங்களை கழுவி கொண்டிருக்க தாமரை செல்வி அவரிடம் விளையாடினார். மூன்றாவது புரமோவில் வந்த கண்டெண்ட் அங்கு தான் நடந்தது. பிரியங்காவுடன் பேசி கொண்டிருந்த தாமரையை ராஜூ பாய் கூப்பிட்டு நாடக்கத்தில் எப்படி வணக்கம் போட வேண்டும் என்பதை பண்ணி காட்டு என்றார். இந்த இடத்தில் தான் அபியின் நகைச்சுவை திறமையை ஊரே கண்டு வியக்கிறது. எங்க பன்னிய காட்டு என்று காமெடி செய்கிறார். கடுப்பான தாமரை நீங்க என்ன வச்சு விளையாடுறீங்கன்னு கிளம்புகிறார். விஜயதசமி என்பதால் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பாவடை தாவணி, புடவை, சுடிதார் என ட்ரெடிஷ்னல் வியரில் கலக்க தொடங்கினர். இதில் பிரியங்காவின் ஆடை சற்று வித்யாசமாக இருந்தது. ஆனால் அது தாமரைக்கு பிடிக்கவில்லை.

  நாடி ஜோசியர் அபி, நிரூப் பற்றி வழக்கம் போல் ஏதோ ரிவியூ செய்ய, நிரூப்பின் முகமே மாறிவிட்டது. பிரியங்கா வந்து அந்த கூட்டத்தை கலைத்துவிட நிரூப் அங்கிருந்து வேகமாக கிளம்பினார். ஸ்ருதி, தன்னை பற்றி ஏன் அப்படி பேசினீர்கள் என அபிஷேக்கிடம் விசாரணை நடத்த வழக்கம் போல் பேசியே சமாளித்தார் அபி.ஆனால் ஸ்ருதி செம்ம கடுப்பில் இருந்தது முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது. பெண்களுடன் சேர்ந்து கும்மி அடித்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. இசைவாணி, ஸ்ருதி சாப்பாடு ஊட்ட, மதுமிதா தலைக்கு மசாஜ் செய்ய ஒரே ராஜா போக விருந்து தான். இதை நோட் பண்ண, நிரூப் பாத்ரூமில் ஒரு கச்சேரியை அரங்கேற்றினார். நீ ஏன் எல்லோரிடமும் பேசுற, உன்கிட்ட எல்லோரும் வந்து பேச ஒரு காரணம் இருக்கு என்கிறார். என்ன காரணம் தெரியுமா? பிரியங்காவுடன் இருந்தால் எல்லோரும் வெளியே தெரிவோம், கண்டெண்ட் கொடுக்கலாம், கேமரா கேப்ச்சர் செய்யும் என்ற காரணத்தினால் தான் எல்லோரும் தானாகவே வந்து வந்து உன்னிடம் பேசுகிறார்கள் என்ற புதுகதையை சொல்கிறார் நிரூப். இதற்கு பிரியங்கா கொடுத்த பில்டப் எல்லாம் தாங்க முடியல. இசை, மது, ஸ்ருதி எல்லோரும் பிரியங்கா பேசலனா வந்து வந்து பேசுறாங்களாம். டார்ச்சர் தாங்க முடியலையாம். இதை சொன்னவர், நிரூப் பாத்ரூம்முக்கு போனதும் உடனே கேமரா முன்பு நடிக்க தொடங்கினார். (எதுக்கு இப்படின்னு தெரியல)

  நிரூப் - பிரியங்கா பெஸ்டி அட்ராசிட்டி புகைப்பிடிக்கும் ஏரியா வரை சென்றது. அடுத்தது பிக் பாஸின் கொளுத்தி போடும் டாஸ்க் சிறப்பாக தொடங்கியது. விதிமுறைகளை அபிஷேக் வாசித்தார். அதனைத்தொடர்ந்து வாரத்தின் சிறந்த எண்டர்டெயினர் மற்றும் காணாமல் போனவர்களின் பெயர்களை டிஸ்கஸ் செய்ய தொடங்கினர் குழுவினர். முடிவு எடுத்த பெயர்களை அபிஷேக் குழுவிடம் ஒவ்வொருவராக வந்து ஒப்பித்தனர். இறுதி முடிவுகளை கூற போவது அபிஷேக் குழு தான். எண்டர்டெயினர் பதவிக்கு ராஜூ, பிரியங்கா, இமான் அண்ணாசிக்கு இடையில் கடும் போட்டி. அதே போல் காணாமல் போனவர்கள் லிஸ்டில் இசை, மது, சின்ன பொண்ணு, நாடியாக்கு அதிக ஓட்டுகள்.  ராஜூ மீது பாவனியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. விசாரணை கமிஷன் எப்ப பாஸூ?

  அடுத்த சில நிமிடங்களில் நாடகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வந்தன. போட்டியாளர்கள் அவர்களாகவே மேக்கப் போட்டு ரெடி ஆகினர். கார்டன் ஏரியாவில் நாடகத்திற்கான செட் போடப்பட்டது. ஹவுஸ்மேட்ஸ் நாடகத்தை தொடங்கினர். தொடங்கிய உடனே சின்ன பொண்ணு தன்னை மதிக்கவில்லை என கண்ணீர் சிந்த தொடங்கினார். இதனால் நாடகத்தில் அனைவருக்கும் கவனம் சிதற தொடங்கியது. இசைவாணியை முதலில் பாட சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை போல. அடுத்த சில நிமிடங்களிலே அபி, பிரியங்கா, ஐக்கி எல்லோரும் அவரை சமாதானம் செய்ய தொடங்கினர்.  ஒருவழியாக அவர் மேடைக்கு வர நாடகம் மீண்டும் தொடங்கியது. தாமரை, ராஜூவை தவிர மற்ற அனைவரின் பங்களிப்பும் மிக மிக குறைவு. சுவாரசியமே இல்லாமல் நாடகம் முடிந்தது. ஆங்கராக பிரியங்காவும் ஜொலிக்க தவறினார். அவர் சிரித்தற்கே தாமரை செல்வி கோபித்து கொண்டார். மொத்தத்தில் சரஸ்வதி நாடகமும் பிக் பாஸ் 5 சீசனை போல உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: