பிக் பாஸ் சீசன் 6ல் குக் வித் கோமாளி பிரபலம் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுக் குறித்த உண்மை நிலை இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 6 க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தி டூ தமிழ் ரீமேக்கான பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிக்கரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. இந்த ஆண்டு 6வது சீசன் கூடிய விரைவில் துவங்கப்படவுள்ளது. முதல் 5 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்தாண்டும் கமல்ஹாசனே தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும் அந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 டி.ஆர்.பியில் சக்கை போடு போட்டது. இந்த சீசனின் வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன். இரண்டாவது இடம் பிரியங்காவுக்கு சென்றது.
பாவ்னியை இப்படி மாற்றியதே அமீர் தான். உண்மையை போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னியின் அக்கா!
இருவரும் விஜய் டிவி புராடெக்ட் தான். பிக் பாஸில் எப்போதுமே விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். அது நடிகர், நடிகைகள், ஆங்கர், காமெடி நட்சத்திரம், நடுவர் என யார் வேண்டுமானலும் இருக்கலாம். அந்த வகையில். இந்த லிஸ்டில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஷா, அர்ச்சனா, ரியோ, பாலாஜி, பிரியங்கா, ஷிவானி, கவின், என பலர் சென்றுள்ளனர். இந்த முறையும் இவர்களை போல் விஜய் டிவி பிரபலம் இருப்பது உறுதி. ஆனால் அது யார்? என்பது யூகிக்க முடியாமல் இருந்தது.
அந்த கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ஆல்யா - சஞ்சீவ்
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பிக் பாஸ் சீசன் 6 குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது இந்த முறை பிக் பாஸ் ஷோவில் விஜய் டிவி சார்பாக குக் வித் கோமாளி ஆங்கர் ரக்ஷன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின.
View this post on Instagram
இந்த தகவலை ஆங்கர் ரக்ஷன் இதுவரை உறுதி செய்யவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எந்த தகவலையும் உறுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. கடைசி நேரத்தில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே அவர்கள் தாரக மந்திரம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.