ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஒவ்வொரு நாளும் திருப்பம்.. 100 நாளும் இருக்கும் - பகீர் கிளப்பும் பிக்பாஸ் கமல்! புதிய ப்ரோமோ!

ஒவ்வொரு நாளும் திருப்பம்.. 100 நாளும் இருக்கும் - பகீர் கிளப்பும் பிக்பாஸ் கமல்! புதிய ப்ரோமோ!

பிக்பாஸ் புதிய ப்ரொமோவில் கமல்

பிக்பாஸ் புதிய ப்ரொமோவில் கமல்

சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த தயாரிப்பாளர் ரவீர்ந்தரும் பிக்பாஸ் வீட்டுக்குள் காலடி வைப்பார் எனக் கூறப்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக்பாஸ் சீசன் 6 தொடர்பாக புதிய புரொமோவில் பகீர் கிளப்பியுள்ளார் கமல். 30 வினாடிகள் ஓடும் இந்த புதிய ப்ரொமோ வரவேற்பை பெற்று வருகிறது.

    விஜய் டிவியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. 6வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ளது.

    பிரம்மாண்ட செட்டுடன் புதுப்புது ரூல்ஸுடன் பிக்பாஸ் 6 தயாராகி வருகிறது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் நபர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. சின்னத்திரை, சோஷியல் மீடியா வைரல் நபர்கள் என பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் யார் என்ற ஆர்வம் தற்போதே சோஷியல் மீடியாவில் டாக்காக மாறிவருகிறது.

    ’ PS படம் சூப்பர்’ ஜெயம் ரவிக்கு போன்போட்ட ரஜினிகாந்த்! மகிழ்ச்சியில் துள்ளும் அருண்மொழி வர்மன்!

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் புதிய புரொமோ கவனம் ஈர்த்து வருகிறது. இந்த வீட்ல ஒவ்வொரு நாளும் திருப்பம்… 100 நாளும் இருக்கும் என்று கூறும் கமல் பிக் பாஸ் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறார்.

    இதற்கிடையே, யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என்ற கணிப்பும் எதிர்பார்ப்பும் சோஷியல் மீடியாவில் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் சிலரின் பெயர்களும் கசிந்துள்ளன.

    அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளான, ஆயிஷா, விஜே மகேஸ்வரி, விசித்ரா, ஸ்ரீநிதி, விஜய் டிவி மைனா உள்ளிட்டோர் பங்கேற்பாளர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    Dhanush-Aishwarya Rajinikanth: சந்திப்பிற்கு பிறகு தனுஷ்-ஐஸ்வர்யா எடுத்த முடிவு இதுவா?

    இவர்கள் அனைவருமே சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தவர்கள். குறிப்பாக ஸ்ரீநிதி தொடர்ந்து சோஷியல் மீடியாவில் டாக்காகவே இருந்தவர்.

    அதேபோல் தன்னுடைய ஸ்டைல் காமெடியால் கலக்கும் ஜிபி முத்துவும் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த பிக்பாஸில் பேசப்பட்டு கடைசியில் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகாமல் சென்றார் ஜிபி முத்து. ரசிகர்கள் பலர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டாமென்று கூறியதால் தான் செல்லவில்லை என ஜிபி முத்து தெரிவித்திருந்தார்.

    சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த தயாரிப்பாளர் ரவீர்ந்தரும் பிக்பாஸ் வீட்டுக்குள் காலடி வைப்பார் எனக் கூறப்படுகிறது. அதுபோக, நடிகை ஷில்பா மஞ்சுநாத், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், அமுதவாணன் உள்ளிட்டோரும் பிக்பாஸ் எண்ட்ரியாவார்கள் எனத்தகவல் கசிந்துள்ளது. இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மட்டுமே கசிந்து வருகின்றன.

    Published by:Musthak
    First published:

    Tags: Bigg Boss Tamil