• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி பிக் பாஸ் துவங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் டிவி பிக் பாஸ் துவங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ஷோ 100 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இது குறித்த புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

  • Share this:
    விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹிட்டாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.

    இந்த சீசனுக்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிக்பாஸ் லோகோவை அதிகாரப்பூர்வமான வெளியிட்டுள்ளனர். இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக் பாஸ் ஷோவில் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும். இதனிடையே போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில், குக் வித் கோமாளியில் பங்கேற்ற கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் அவரது மகள் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஜிபி முத்து, செய்தி வாசிப்பாளர் கண்மணி, விஜய் டிவி தொகுப்பாப்பார் விஜே பப்பு, தொகுப்பாளினி பிரியங்கா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில நாட்களாக வித்தியாசமான முறையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி வருகிறது. ஆனால் அதில் கமல் சூசகமாக பேசும் காட்சிகள் மட்டுமே இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது, யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வரை வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு அட்டகாசமான ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் வரும் அக்டோபர் 3 முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளதால் பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

    பிக் பாஸ் ஷோ 100 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும், நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வது முதல் என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும். அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், தினசரி வெளியிடப்படும் ப்ரோமோவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பது, பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி உருவாக்குவது என பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் கொண்டாட்டமாக இருக்கும்.



    மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு, அதில் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் வெளியேற்றப்பட்டு இறுதியாக 3 பேருக்கு விருதுகள், பரிசு பொருட்கள், லட்சக்கணக்கான பணம் வழங்கப்படும். முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என காத்திருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ தேதி வெளியானதால் இனி வரும் நாட்கள் கேளிக்கைகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: