ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உறவினருடன் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருக்கும் மைனா நந்தினி?

உறவினருடன் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருக்கும் மைனா நந்தினி?

மைனா நந்தினி -

மைனா நந்தினி -

மைனா நந்தினி குறித்து மற்றொரு தகவலும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்னத்திரை  நடிகை மைனா நந்தினி இருக்கும் அதே பிக் பாஸ் வீட்டில் அவரின் உறவினரும் போட்டியாளராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது யார் தெரியுமா?

  பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் தொடங்குவதற்கு முன்பும் சரி தொடங்கிய பின்பும் சரி இதுக் குறித்த செய்திகளை தினமும் சோஷியல் மீடியாவில் பார்க்கலாம். மற்ற 5 சீசன்களை காட்டிலும் இந்த 6வது சீசன் லைவாகவும் ஹாட்ஸ்டாரில் டெலிகாஸ்ட் ஆகிறது. அதனால் எல்லா விஷயங்களையும் கட் இல்லாமல் ரசிகர்கள் பார்த்து விடுகின்றனர். 20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியது. 1 வாரம் கழித்து 21 வது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே சென்றார். அவர் மீது ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

  மீண்டும் சீரியலுக்கு வரும் செம்பருத்தி ஆதி.. எகிறும் எதிர்பார்ப்பு!

  முதல்  வாரத்தில் ஸ்மார்ட்டாக பிளே செய்த மைனா விக்ரமுடன் சண்டை, மணிகண்டனுடன் சேர்க்கை என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அவரின் பேச்சும், உடல் மொழியையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மைனாவுக்கு கிடைக்கும் நெகட்டிவ் கமெண்டுகள் பற்றி அவரின் கணவர் யோகேஷ் சமீபத்திய  பேட்டியில் விளக்கம்  அளித்து இருந்தார். அப்போது மைனா இயல்பாக இருப்பதாகவும் அவரின் சுயமரியாதை மீது விமர்சனம் வைக்கும் போது தான் வெடிப்பதாகவும்  கூறி இருந்தார்.

  இந்நிலையில் மைனா நந்தினி குறித்து மற்றொரு தகவலும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக  களம் இறங்கி இருக்கும் ADK மைனாவின் நெருங்கிய உறவினர் என கூறப்படுகிறது. அதாவது அவர் மைனாவின் மாமன் மகனாம். இதை இருவரும் சக ஹவுஸ்மேட்ஸ்கள் என யாரிடமும் வெளிக்காட்டாமல் தங்களுடைய கேம்மை ஆடி வருவதாக கூறப்படுகிறது.

  அதே போல் இது நாள் வரையிலும் இருவரும் பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு விஷயத்திற்காகவும் சண்டை போட்டது இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.இணையத்தில் பரவி வரும் இந்த தகவலின் உண்மை நிலை என்ன? என்பதை மைனா அல்லது ADK பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு தான் தெரியும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv