• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உதட்டில் முத்தமிட்டு ரொமான்ஸ் செய்த பிக் பாஸ் போட்டியாளர்கள் - வைரலாகும் வீடியோ

உதட்டில் முத்தமிட்டு ரொமான்ஸ் செய்த பிக் பாஸ் போட்டியாளர்கள் - வைரலாகும் வீடியோ

பிக் பாஸ்

பிக் பாஸ்

நல்லவேளை இந்த நிகழ்ச்சி ஒன்பது மாதங்கள் ஓடாது, அப்படி இருந்தால் நிச்சயம் ஒரு குழந்தை பிறக்கும் என்று ஹவுஸ்மேட் ஜெய் பானுஷாலி கூறியது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    பிக் பாஸ் போட்டியாளர்கள் இருவர் வீட்டுக்குள் முத்தம் கொடுத்து, ரொமான்ஸ் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 5' முதல் வாரம் அமைதியாக இருந்தது, இப்போது குழுவாதம் மற்றும் சர்ச்சைகள் மெதுவாக வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷனில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று தெரிந்துக் கொள்ள பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    இதற்கிடையில் இந்தி பதிப்பான 'பிக் பாஸ் 15' கடந்த அக்டோபர் 2-ம் தேதி தொடங்கியது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், மீஷா ஐயர் மற்றும் இஷான் சேகல் ஆகிய பிரபலங்கள் நெருக்கமாகியிருக்கிறார்கள்.

    நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவில், கேமராக்கள் பெரிதாக்கப்பட்டது கூட தெரியாமல், மீஷாவும், இஷனும் காதலில் மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் மற்ற யாரையும் பொருட்படுத்தவில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் உதட்டிலும், தோள்பட்டையிலும் தொடர்ந்து முத்தமிடுவதைக் காண முடிகிறது. 'பிக் பாஸ்' வீட்டின் பல மூலைகளிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by ColorsTV (@colorstv)






    இந்த நிகழ்ச்சியில் நெட்டிசன்கள் இதுவரை சண்டைகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டனர். அதனால் சிலருக்கு இந்த காதல் தீப்பொறி நிவாரணமாக இருந்தது. இருப்பினும், தேசிய தொலைக்காட்சியில் வெளிப்படையாக காதல் காட்சிகளை ஒளிபரப்புவதை சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர். 'பிக் பாஸ் 15' நிகழ்ச்சியில் மீஷாவும், இஷனும் தேனிலவு சென்றிருக்கிறார்களா என ஒருவர் கேள்வி எழுப்பினார். நல்லவேளை இந்த நிகழ்ச்சி ஒன்பது மாதங்கள் ஓடாது, அப்படி இருந்தால் நிச்சயம் ஒரு குழந்தை பிறக்கும் என்று ஹவுஸ்மேட் ஜெய் பானுஷாலி கூறியது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: