Mahat Raghavendra: அப்பாவான பிக் பாஸ் மஹத்... குவியும் வாழ்த்துகள்!

மஹத் - பிராச்சி

இந்த மகிழ்ச்சியால் பிராச்சியும் நானும் மகிழ்ச்சியடைகிறோம்.

  • Share this:
    நடிகர் மஹத் - பிராச்சி தம்பதி தங்களுக்கு குழந்தை பிறந்த நிகழ்வை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள்.

    மஹத் ராகவேந்திரா மற்றும் பிராச்சி மிஸ்ரா ஆகியோர் நேற்று காலை ஒரு ஆண் குழந்தையின் பெற்றோரானார்கள். முதல் குழந்தையை வரவேற்பதில் மகிழ்ச்சியடைந்த மகத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிராச்சி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த மகத், “கடவுள் இன்று காலை ஒரு அழகான ஆண் குழந்தையை எங்களுக்கு ஆசீர்வதித்தார்! இந்த மகிழ்ச்சியால் பிராச்சியும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் அன்பு மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைத்திற்கும் நன்றி. அப்பாவாக இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Mahat Raghavendra (@mahatofficial)






    இதைப் பார்த்த கிக்கி விஜய், சுப்ரா ஐயப்பா, காயத்ரி ரகுராம், யாஷிகா ஆனந்த் மற்றும் பிக் பாஸ் தமிழ் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா போன்றவர்கள் மகத் - பிராச்சி தம்பதியை வாழ்த்தினர். மகத் ராகவேந்திராவும், பிராச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாக காதலித்து, இறுதியில், ஜனவரி 2020-ல் திருமணம் செய்துக் கொண்டனர். தங்கள் முதல் திருமண ஆண்டு விழாவில் அழகான படங்களுடன் பிராச்சியின் கர்ப்பத்தை அறிவித்தார் மகத்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: