தமிழ் சேனல்களின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி OTT ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேர ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்ற முதல் சீசனும் சமீபத்தில் நிறைவடைந்தது.
கிட்டத்தட்ட 90 போட்டியாளர்களுக்கு மேல் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளனர்.இவர்களில் பலருக்கும் தங்களுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது ம ற்றும் பிரபலம் அடைந்திருக்கின்றனர். சீசன் 5ன் போட்டியாளராக கலந்து கொண்ட ஜெர்மனியை சேர்ந்த மதுமிதாவும் பிக்பாஸ் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல துறைகளில் இருந்தும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களும் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட மதுமிதா. கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழும் கியூட்டான தோற்றமும் மதுமிதாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்களை உருவாக்கியது.
also read : இதை ஏன் செஞ்சேன்னு எனக்கே தெரியல.. 6 மாத வலியை பகிர்ந்த சமந்தா!
பிக்பாஸ் சீசன் போட்டியாளரான மதுமிதா ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவருக்கு ஃபேஷன் டிசைனராக ஆக வேண்டும் என்ற கனவு இருப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசினார். மேலும், மதுமிதா மிகவும் இன்னசென்ட் ஆக இருக்கிறார் என்று பிக்பாஸ் சீசனிலே பலராலும் கூறப்பட்டவர.
மிகவும் வெள்ளந்தியாக இருந்த மதுமிதாவால் நீண்ட நாட்களுக்கு பிக்பாஸ் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சில வாரங்களிலேயே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு சில நாட்கள் தமிழ் நாட்டிலேயே தங்கி இருந்தார். அப்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டார். பின்னர் ஜெர்மனிக்கு சென்று விட்டார். மிகவும் ஜாலியான பெண் மதுமிதா என்பது பிக்பாசில் வெளிவந்த சில நாட்களிலேயே தெரிந்தது. பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுடன் மிக நெருக்கமான நட்பை வளர்த்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
also read : விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா பற்றி பரவிய அந்த தகவல்..கடைசியில் தெரிய வந்த உண்மை!
இன்னசென்ட் தோற்றத்தில் பிக்பாசில் இருந்த மதுமிதா, சமீபத்தில் ஹாட்டான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து மதுமிதாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போய் இருக்கின்றனர்.
சமூக வலை தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் மதுமிதா சமீபத்தில் கவர்ச்சிகரமான இமேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பார்த்த மதுமிதாவா இது என்று சந்தேகப்படும்படி அவ்வளவு கிளாமரான தோற்றத்தில் டூ பீஸ் ஆடையில் இவருடைய புகைப்படங்கள் இருந்தது.
அது போதாது என்று சமீபத்தில் கிளாமர் மாண்டேஜ் ஷாட்ஸ் போல கவர்ச்சி நடிகைகளை விட அதிகமான கவர்ச்சியுடன் பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளாக அதிரடிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவை பார்த்து அந்த மதுமிதா தான் இது என்று நம்பவே முடியவில்லை பலரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.