Home /News /entertainment /

"வேற மாறி வேற மாறி"- நடிகை லாஸ்லியாவின் டான்ஸை பாராட்டும் ரசிகர்கள்!

"வேற மாறி வேற மாறி"- நடிகை லாஸ்லியாவின் டான்ஸை பாராட்டும் ரசிகர்கள்!

லாஸ்லியா

லாஸ்லியா

கல்லுாரியில் நடக்கும் அரசியல் கலந்த கதையாக இந்த படம் உருவாகியுள்ளதாக கூறி இருக்கும் நடிகை லாஸ்லியா

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  விஜய் டிவி-யின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் பங்கேற்று தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை லாஸ்லியா.

  இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா மரியனேசன் கடந்த 1996-ல் மார்ச் 23-ம் தேதி பிறந்தார். இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்த இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள். திருகோணமலையில் தன் கல்வியை தொடர்ந்த லாஸ்லியா, சில காலம் இலங்கை தலைநகர் கொழும்புவிலும் வசித்து வந்தார். பின்னர் இலங்கையில் டிவி தொகுப்பாளராகவும். தமிழ் செய்தி வாசிப்பாளராகவும் வேலை பார்த்து வந்த லாஸ்லியா, பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

  கடந்த 2019-ம் ஆண்டு பிக்பாஸின் 3-வது சீசன் விஜய் டிவியில் ஜூன் 23 துவங்கி ஏறக்குறைய 105 நாட்கள் ஒளிபரப்பானது. இந்த ரியாலிட்டி ஷோவின் முடிவில் முகின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

  இந்த சீசனின் போது கவின் - லாஸ்லியா இடையே இருந்த நெருக்கம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியது நினைவிருக்கலாம். கவின் - சாக்ஷி இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த விவகாரம் தெரிந்தும் கவினுடன் நெருக்கமாக பழகுவதிலேயே லாஸ்லியா ஆர்வம் காட்டியதும், அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டில் நடந்த பல களேபரங்களும், செட்டிற்கு வந்த லாஸ்லியாவின் தந்தை தன் மக்களை வார்த்தைகளால் வெளுத்து வாங்கியதும் நிச்சயம் நம்மால் மறக்க முடியாத சம்பவங்களாக இன்றும் இருக்கிறது.

  இந்நிலையில் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோரது இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நகைச்சுவை நடிகர்கள் சதீஷ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, படவா கோபி, ஜீவா ரவி உள்ளிட்ட பல மூத்த நடிகர்களை நடிக்கும் திரைப்படமான "பிரண்ட்ஷிப்"-பில் நடிகை லாஸ்லியா நடித்து இருக்கிறார். லாஸ்லியா வெள்ளித்திரையில் அறிமுகமாகும் முதல் திரைப்படமான "பிரண்ட்ஷிப்"வரும் செப்டம்பர் 17-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கல்லுாரியில் நடக்கும் அரசியல் கலந்த கதையாக இந்த படம் உருவாகியுள்ளதாக கூறி இருக்கும் நடிகை லாஸ்லியா, திரைப்படத்தில் நடிப்பதை காட்டிலும் டப்பிங் பேசுவது சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்து இருந்தார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாடர்ன் டிரெஸில் தான் டான்ஸாடும் வீடியோ ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார்.
  பயங்கர எனர்ஜியுடன் சில வினாடிகள் ஆடும் இவரது டான்ஸ் மற்றும் ஆடிவிட்டு கடைசியாக நடந்து செல்லும் லாஸ்லியாவின் அழகை கண்ட ரசிகர்கள் வேற மாறி வேற மாறி என்று பாராட்டி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Losliya

  அடுத்த செய்தி