• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பிக் பாஸ் கமலின் திடீர் அதிரடி... போட்டியாளர்களை பற்றி பார்வையாளர்களிடம் கருத்து கேட்பு!

பிக் பாஸ் கமலின் திடீர் அதிரடி... போட்டியாளர்களை பற்றி பார்வையாளர்களிடம் கருத்து கேட்பு!

பிக் பாஸ்

பிக் பாஸ்

கமல், அபிஷேக் வந்து ஒரு நாள் தான் ஆகிறது என்றும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறுகிறார்.

 • Share this:
  விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 47 நாட்களை வெற்றிகரமாக கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

  இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய், சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

  இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட காரணங்களுக்கான நாடியா சங் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என அடுத்தடுத்து வெளியேறினர். இந்தநிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் அக்ஷ்ரா, பாவ்னி, தாமரை, சிபி, இமான், அபினய், இசைவாணி, ஐக்கி, நிரூப் ஆகிய 9 பேர் இந்த வார நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

  இதற்கிடையே நேற்றைய நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யமின்றி இருப்பதாகவும், நல்ல கன்டென்டுகள் கிடைக்கும் என்பதால் அபிஷேக் ராஜாவை மீண்டும் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வந்த நிலையில், நேற்று இந்த தகவல் உறுதியானது. அபிஷேக்கை பார்த்து பார்த்து, பாவ்னி, இசை மற்றும் பிரியங்கா ஆகியோர் உற்சாகமடைந்தனர்.

  அபிஷேக் சென்ற பின்னர் தான் பிரியங்கா தனித்துவமாக தனது கேமை விளையாடி வருகிறார். இதனால் அபிஷேக் மீண்டும் வந்தால் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்றே கூறப்படுகிறது. அபிஷேக் ரீஎன்ட்ரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றங்களை எற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நான் இப்போது தான் உன்னுடைய ப்ரண்ட் உடன் க்ளோஸ் ஆக தொடங்கினேன் அதுக்குள்ள வந்துட்டியா? என ராஜு, அபிஷேக்கிடம் கூறுகிறார். அப்போது அருகில் இருந்த நிரூப் இனி பிரியங்காவிடம் இருந்து விலகியே இரு என்று உனக்கு வார்னிங் கூறுகிறார் என்கிறார். அதை பார்த்ததும் அபிஷேக் இனி அப்படி இருக்க மாட்டேன் என்று கூறும் காட்சிகள் உள்ளது.  பிக் பாஸ் நிகழ்ச்சில் சனி மற்றும் ஞாயிறுகளில் அந்த வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் குறித்து கமல் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறோம் என கூறும் கமல், உங்கள் பார்வையில் போட்டியாளர்கள் குறித்து கூறுமாறு பார்வையாளர்களிடம் கேட்கிறார். முதலில் பேசும் நபர், ராஜு இறுதிவரை செல்ல வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார். இதனை தொடர்ந்து சிபி, ராஜு, வருண் என ஆண்கள் ஸ்டாங்காக இருக்கிறார்கள் என்கிறார். அபிஷேக் இல்லாத பிரியங்காவை பிடிக்கும் என கூற அதற்கு கமல், அபிஷேக் வந்து ஒரு நாள் தான் ஆகிறது என்றும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும் கூறும் காட்சிகள் உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: