Home /News /entertainment /

தாலி பற்றி ஜூலி கேட்ட கேள்வி? தாமரையின் விளக்கம்!

தாலி பற்றி ஜூலி கேட்ட கேள்வி? தாமரையின் விளக்கம்!

Bigg Boss

Bigg Boss

Bigg Boss Ultimate | ஜூலி நீங்கள், இரண்டாம் திருமணம் ஆகியும், ஏன் தாலி அணியவில்லை என்று மிகவும் சென்சிட்டிவான ஒரு கேள்வியை தாமரையை பார்த்து கேட்டார்.

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை கடக்க இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட்டைப் பொறுத்தவரை அதன் போட்டியாளர்கள் தான் மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருக்கிறார்கள் . சீசன் 1ல் இருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2ல் இருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4ல் இருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் யாரும் எதிர்பார்க்காதபடி டாஸ்க் குயின் என்று அழைக்கப்படும் கடுமையான பெண் போட்டியாளரான சுஜா வெளியேற்றப்பட்டார்.

வெவ்வேறு சீசனில் இருந்து போட்டியாளர்கள் வந்தாலும் இந்த சீசனில் அவரவருக்கென்று நட்பும், குழுவும் அமைந்துள்ளது. ஆனால் அதுவே ஸ்ட்ராட்டஜி என்று பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சீசனின் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஜூலியும் ஒருவர். அதேபோல கடந்த சீசனிலும் ஃபைனல் வாரத்துக்கு முன்பு வெளியேற்றப்பட்ட தாமரை மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சீசனில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து போட்டியாளர்களுமே தைரியமாக பேசக் கூடியவர்கள். யார் எந்த கேள்வி கேட்டாலும், துணிச்சலாக யோசிக்காமல் பூசி மழுப்பாமல் பதில் சொல்லும் திறன் கொண்டவர்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read : சினிமாவுக்காக 11 வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்த நடிகை

ஜூலி மற்றும் தாமரை பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்களுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டனர். முதல் திருமணம் தோல்வி அடைந்த நிலையில், தாமரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இன்னொரு குழந்தையும் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது ஜூலி நீங்கள், இரண்டாம் திருமணம் ஆகியும், ஏன் தாலி அணியவில்லை என்று மிகவும் சென்சிட்டிவான ஒரு கேள்வியை கேட்டார்.

Also Read : மகனை பார்த்து கதறி அழுத சர்வைவர் விஜயலட்சுமி!

அதற்கு, தாமரை தெளிவாக பதில் கூறினார். திருமணம் செய்து கொண்ட போதே கவரிங் நகை போட்டுத் தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கவரிங் நகை அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்பதால் அதை அணிவதில்லை. நாடகங்களுக்கு, வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவரிங் நகைகளை அணிந்து வீட்டுக்கு வந்தவுடன் உடனே கழற்றி வைக்கும் பழக்கம் இருக்கிறது. அதனால் தான் தாலியை அணிவதில்லை என்று கூறினார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்றதும், தங்கத்தில் வாங்க வேண்டும் என்றும் கூறினார்.
Published by:Selvi M
First published:

Tags: Bigg boss Julie, Bigg Boss Tamil

அடுத்த செய்தி