பிக் பாஸ் ஜூலி தனது வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காட்டியுள்ளார். யூடியூப் சேனலில் ஜூலி வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
ஜல்லிகட்டு போராட்டத்தின் போது இணையத்தில் பல முகங்கள் வைரலானது. அதில் ஜூலியும் ஒருவர். இதன் மூலம் கிடைத்த புகழின் பேரில் ஜூலிக்கு பிக் பாஸ் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தார். கேலி, கிண்டலுக்கு ஆளானார். பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூலி வெளியே வந்த பின்பும் ட்ரோல்கள் அவரை தொடர்ந்தன. ஒருசில சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் படங்களிலும் நடித்தார். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அதிகப்படியான ரசிகர்களை சம்பாதித்தார்.
ஜனனியை காணோம்... எதிர் நீச்சல் சீரியலில் பரபரப்பு!
பிக் பாஸ் முதல் சீசனில் கிடைத்த நெகட்டிவை அப்படியே பாசிடிவாக மாற்றி வெளியே வந்தார். இப்போது ஜீ தமிழ் சீரியலில் நடிக்கிறார். அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான ஜூலி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் முதல் டூர் வீடியோவாக தனது ஹோம் டூரை ஜூலி வெளியிட்டுள்ளார்.
மெளன ராகம் சீரியலில் சத்யா - வருணை சேர்த்து வைக்க போவது இவர் தானா?
ஜூலி பற்றி அதிகம் தெரிந்த ரசிகர்களுக்கு அவரின் குடும்பம், வீடு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் இந்த வீடியோ மூலம் பல விஷயங்களை ஜூலி ஷேர் செய்கிறார். தனது அம்மா, அப்பா, தம்பியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இதே வீட்டில் தான் ஜூலி வசிக்கிறாராம். ஜல்லிகட்டு, பிக் பாஸ், பிக் பாஸ் அல்டிமேட் என ஜூலியின் பிளஸ், மைனஸ் இரண்டையும் இந்த வீடு பார்த்து இருக்கிறதாம்.
மிடில் கிளாஸ் குடும்பங்களின் வீடு போல அளவான ஹால், சின்ன கிச்சன், 2 பெட் ரூம் என அடக்கமான அழகான வீட்டில் ஜூலி இருக்கிறார். சின்ன வீட்டையும் அழகாக பார்க்கும் மனமே போதும் என்கிறார் அவர். அதே போல் கூடிய விரைவில் புது வீடு சொந்தமாக கட்டி குடி போவோம் என்றும் ஜூலி இந்த வீடியோவில் ரசிகர்களுக்கு கூறுகிறார். அப்படி என்றால் இப்போது அவர் இருப்பது வாடகையில் வீட்டில். அதுமட்டுமில்லை பிக் பாஸ் மூலம் கிடைத்த வருமானத்தில் முதன் முதலாக வாங்கிய ஸ்கூட்டியையும் வீடியோவில் காட்டுகிறார்.
ஏசி இல்லாத பெட்ரூம், வீட்டில் வளர்க்கும் பச்சை கிளி என சிரித்தப்படியே எல்லோவற்றையும் ரசிகர்களுக்கு காட்டி மகிழ்கிறார். ஜூலியின் இந்த ஹோம் டூர் வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg boss Julie, Bigg Boss Tamil, Jallikattu julie, Vijay tv