Home /News /entertainment /

பிக் பாஸ் ஜூலி தனது காதலன் ஏமாற்றிவிட்டதாக போலீஸில் புகார்

பிக் பாஸ் ஜூலி தனது காதலன் ஏமாற்றிவிட்டதாக போலீஸில் புகார்

பிக்பாஸ் ஜூலி

பிக்பாஸ் ஜூலி

டூ வீலர்,16 கிராமில் தங்க செயின், ஃபிரிட்ஜ் என பல பொருட்களை வாங்கி கொடுத்து சுமார் 2.50 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஜூலி.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  உலகையே தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிகட்டு போராட்டம். அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்கள் பலவற்றை எழுப்பி மக்கள் தன்னை திரும்பி பார்க்கும்படி செய்த பெண் தான் ஜூலி. சென்னை மெரினா பீச்சில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் புகழ் பெற்றவர் மரியா ஜூலியானா என்கிற ஜூலி.

  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற அதே ஆண்டே பிக்பாஸ் துவங்கியதால் தற்போது மக்கள் மத்தியில் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் சீசன் 1-ல் பங்கேற்று மேலும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்த கேமில் பங்கேற்ற இவருக்கு பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சர்ச்சைகள் மற்றும் இவரது நடத்தை காரணமாக ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின.

  அதுவரை ஜல்லிக்கட்டு ஜூலியாக மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றிருந்த இவர், பிக்பாஸ் ஜூலியாக பலரது வெறுப்பிற்கும் ஆளானார். இவரை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து மீம்ஸ்களை வைரலாக்கினர். பிக் பாஸிலிருந்து வந்த பின்னர் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இது தவிர அம்மன் தாயி என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்குள்ளும் நுழைந்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானாலும் தன்னை விமர்சிப்பவர்களுக்கு அவ்வப்போது தக்க பதிலடி கொடுப்பது ஜூலியின் வழக்கம்.

  இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மணிஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் காதலர் மணிஷ்  தற்போது மோசடி செய்து விட்டதாக அண்ணாநகர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார் ஜூலி. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  அப்பான்னு கூட பார்க்காம லெஃப்ட் ரைட் வாங்குன மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

  மணிஷ் மீதான மோசடி புகாரில், காதல் திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக மணிஷுடன் நெருங்கி பழகி வாழ்ந்து வந்ததாகவும் அவருக்கு டூ வீலர்,16 கிராமில் தங்க செயின், ஃபிரிட்ஜ் என பல பொருட்களை வாங்கி கொடுத்து சுமார் 2.50 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை அடுத்தே அவருக்கு இத்தனையும் செய்ததாக கூறி இருக்கும் ஜூலி, ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன் எனது மதத்தை காரணம் காட்டி நம் திருமணத்திற்கு என் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை.   
  View this post on Instagram

   

  A post shared by Julee (@mariajuliana_official)


  எனவே உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விலகி விட்டதாகவும் கூறி இருக்கிறார். தன்னுடனான காதலை முறித்துக் கொண்டதை அடுத்து மணிஷ் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் பறித்துள்ளார் என மோசடி புகார் கூறி இருக்கிறார் ஜூலி,. மணிஷின் செயலால் எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாரிடம் அளித்த புகாரில் ஜூலி கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலியின் புகாரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg boss Julie, Bigg Boss Tamil

  அடுத்த செய்தி