Home /News /entertainment /

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றது இவர்களா? 2வது இடம் குறித்த தகவலும் வெளியானது!

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றது இவர்களா? 2வது இடம் குறித்த தகவலும் வெளியானது!

பிக் பாஸ் ஜோடிகள்

பிக் பாஸ் ஜோடிகள்

பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியிலும் அமீர்-பாவனி பங்கேற்று ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்திருந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிக் பாஸ்  ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ஃபைனல்ஸில் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் அப் பட்டத்தை பெற்ற ஜோடிகள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

    ஸ்டார் விஜய் டிவி பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியை வார இறுதியில் ஒளிப்பரப்புகிறது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது ரீல் மற்றும் ரியல் ஜோடிகளுடன் நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை ஆங்கர் பிரியங்கா மற்றும் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்கி வருகின்றனர்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடி என்றால் பாவனி-அமீர் தான். பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியிலும் அமீர்-பாவனி பங்கேற்று ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்திருந்தனர்.

    மேடையில் திடீரென்று பெயரை சொல்லி கூப்பிட்ட விக்ரம்.. ஷாக்காகி போன விஜே அஞ்சனா!

    கடந்த ஆண்டு பிபி ஜோடிகள் முதல் சீசன் ஒளிப்பரப்பானது. இதில் ஷாரிக் - அனிதா ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக தலைமை தாங்கினர். இதன் தொடர்ச்சியாக தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இந்த முறை நடுவர் அவதாரம் எடுத்துள்ளார். இவர்களை தவிர இந்த சீசனில் இசைவாணி- வேல்முருகன், ஜக்கி - தேவ், அபிஷேக்- சுருதி, ஆர்த்தி -கணேஷ், சுஜா- சிவகுமார், தாமரை - பார்த்தசாரதி ஆகியோரும் போட்டியாளர்களாக களத்தில் இறங்கினர்.



    விறுவிறுப்பாக நடந்த எபிசோடில் ஒவ்வொரு ஜோடிகள் வெளியேற்றப்பட்டன. கடைசியில் அமீர் - பாவ்னி, சுஜா - சிவா, ஆர்த்தி - கணேஷ்கர், தாமரை - பார்த்தசாரதி ஜோடிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 ஃபனல்ஸ் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதுக் குறித்த புரமோ ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லை சிறப்பு விருந்தினர்களாக ரன்பீர் கபூர், ராஜமெளலி, நாகார்ஜுனா ஆகியோர் வருகை தருகின்றனர்.

    மீண்டும் பழைய இடத்திற்கு சென்ற பிக் பாஸ் அர்ச்சனா!

    இந்த பிபி ஜோடிகள் 2வில் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே அமீர் - பாவ்னி முதலிடத்தை பிடித்து டைட்டில் வென்றதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதே போல் 2 வது இடம் சுஜா வருணி - சிவாவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளியான தகவல் உண்மையா? இல்லையா? என்பது நிகழ்ச்சி டெலிகாஸ்ட் ஆன பின்பே தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Big boss tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி